கொரோனா வைரஸ் (Corona Virus) கடந்த ஆண்டு முதல் உலகம் முழுவதும் பரவி அனைவரையும் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸை எதிர்த்து செயல்படும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16, சனிக்கிழமை தொடங்கி போடப்பட்டு வருகிறது. முன்னுரிமை அடிப்படையில் முதலில் மூன்று கோடி சுகாதார ஊழியர்கள் மற்றும் முன்னணி கள ஊழியர்களுக்கு தடுப்பூசி (Vaccine) போடப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில், கொரோனா நோய்தொற்றால் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
விவசாயிகளுக்கு தடுப்பூசி:
விழுப்புரம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) போடப்பட்டது. விழுப்புரம், மகாராஜபுரம் நகராட்சி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஜோதி தலைமையிலான மருத்துவ குழுவினர் பங்கேற்று, சுமை துாக்கும் தொழிலாளர்கள், விவசாயிகள், எடையாளர்கள் மற்றும் வியாபாரிகள் உள்ளிட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர்.
இவர்களோடு, நெல், அரிசி வியாபாரிகள் சங்க தலைவர் குபேரன், செயலாளர் வேல்முருகன், சிறுதானிய வியாபாரிகள் சங்கத் தலைவர் நுார்தீன், பருத்தி வியாபாரிகள் சங்கத் தலைவர் நடராஜன், ஒழுங்குமுறை விற்பனைக் கூட செயலாளர் கண்ணன், மேலாளர் சரவணன், கண்காணிப்பாளர் கேப்டன் வளன் ஆகியோரும் கொரோனா தடுப்பூசியை போட்டு கொண்டனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
விதைக்கிழங்கு உற்பத்தி தொழில்நுட்பத்தால் வருமானம் தரும் மூலிகைச் செடிகள்!
வெயிலின் தாக்கத்தால் 1000 ஏக்கர் பயிர்கள் கருகும் அபாயம்! தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை!
Share your comments