இராஜபாைளயம் மலைப்பகுதியில் மா விளைச்சல் தொடர்ந்து குறைவாக இருப்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள அய்யனார் கோவில் செல்லும் வழியில் எண்ணற்ற மா தோப்புகள் உள்ளன. அவற்றில் பஞ்சவர்ணம், சப்பட்டை மற்றும் ஆரா போன்ற மாம்பழங்கள் அதிகமாக விளைகின்றது. சிவப்பு மண் (Red soil) உள்ள பகுதியில் பஞ்சவர்ணம் வகையை சேர்ந்த மாம்பழம் அதிக இனிப்பு சுவையுடன் விளைகிறது. ராஜபாளையத்தில் மட்டுமே விளையக்கூடிய பஞ்சவர்ணம் மாம்பழம் ஒரு மாதம் வரை வைத்தும் சாப்பிடலாம்.
முந்தைய காலத்தில் பஞ்சவர்ணம் மாம்பழத்தின் காம்பை நீக்கி தேனில் ஊறவைத்து ஒரு வருடம் வரை வைத்து சாப்பிட்டதாக முன்னோர்கள் கூறுகின்றனர். சப்பட்டை மாம்பழம், ஆந்திராவிலிருந்து நூறு ஆண்டுகளுக்கு முன் விதைகளை எடுத்து வந்து இங்கு பயிரிட்டு விளைச்சலை காண்கின்றனர். அய்யனார் கோவில் ஆற்றில் ஒருபுறம் உள்ள சிவப்பு மண் பகுதியில் விளையும் மாம்பழங்கள் (Mangoes) மற்ற இடங்களில் விளையக்கூடிய மாம்பழங்களை விட மிக இனிப்பாக உள்ளது.
மழையினால் பாதிப்பு
மாமரம் பூ பூக்கும் காலத்தில் மழை அதிகமாக பெய்தால் மாம்பழ விளைச்சல் பாதிக்கும். கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இப்பகுதியில் மழை பெய்ததால் தற்போது மாம்பழ விளைச்சல் குறைந்து காணப்படுகின்றது. ஏற்கனவே கடந்த வருடம் கொரானா (Corona) காலகட்டத்தில் குறைந்த விளைச்சல் தற்போது வரை நீடிக்கின்றது. ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 600-க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் மாந்தோப்புகள் உள்ளன. தற்போது இங்கு மாங்காய்கள் நன்கு காய்க்க ஆரம்பித்து விட்டன.
இங்கு பஞ்சவர்ணம், சப்பட்டை, ஆரா போன்ற மாம்பழங்களின் விளைச்சல் அதிகமாக இருக்கும். ஆண்டுதோறும் பங்குனி, சித்திரை மாதங்களில் மாம்பழம் சீசன்கள் தொடங்கப்பட்டு 2 மாதங்கள் தொடர்ந்து பல்வேறு ஊர்களுக்கு மாம்பழங்களை பொதுமக்கள் வாங்கி செல்வார்கள்.
நிவாரணத்தொகை
அதிலும் குறிப்பாக பஞ்சவர்ணம், சப்பட்டை மாம்பழங்களின் விலை (Price) ஆண்டுதோறும் மாறுபடும். கடந்த ஆண்டு விளைச்சல் குறைவாக இருப்பதால் அதிகமாக விற்பனை இல்லாமல் விவசாயிகள் நஷ்டம் (Loss) அடைந்தனர். அதே போல இந்த ஆண்டும் விளைச்சல் குறைவாக காணப்படுகிறது. விளைச்சல் குறைவாக இருக்கும் சமயத்தில் இதுபோன்ற ரக மாம்பழங்களுக்கு விவசாயிகளுக்கு அரசு நிவாரணத்தொகை (Compensation) வழங்கினால் விவசாயிகளும், வியாபாரிகளும் பயனடைவார்கள்
வேதிப்பொருட்கள்
இங்கு விளையக்கூடிய பிரபலமான பஞ்சவர்ணம் மாம்பழங்கள் சென்னை, கோவை பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. நூறு ஆண்டுகளுக்கும் மேல் உள்ள பழமையான மாமரங்கள் இன்றும் மாம்பழ விளைச்சலை தருகின்றது. தற்போதைய காலகட்டங்களில் செயற்கை உரம் மற்றும் வேதிப்பொருட்கள் (Chemicals) மூலம் மாமரத்திற்கு மருந்து அடிப்பதனால் சுவை மாறி மாம்பழ தொழில் பாதிப்படைகின்றது.
விவசாயிகள் கவலை
ஆனால் இங்கு இயற்கையான முறையில் சாகுபடி (Cultivation) செய்வதால் அனைவரும் விரும்பி வாங்கி செல்கின்றனர். தொடர்ந்து மா விளைச்சல் குறைவாக இருப்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர் என்று விவசாயி இராஜேந்திரன் கூறினார்.
Krishi Kagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
ஈரோட்டில் சூறாவளிக்காற்று மற்றும் யானைகளின் அட்டகாசத்தால் வாழை மரங்கள் சேதம்! இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை!
கால்நடை வளர்ப்பவர்களுக்கு பயனுள்ள இரு செயலிகள்!
Share your comments