1. செய்திகள்

சீமைக்கருவேல மரங்களை அகற்ற இறுதி கொள்கை முடிவு: சென்னை உயர்நீதிமன்றம்!

R. Balakrishnan
R. Balakrishnan

Final policy decision to remove Prosopis juliflora trees

தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றுதல் குறித்து இறுதி கொள்கை முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் 2 மாதங்கள் அவகாசம் வழங்கியுள்ளது. தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றக்கோரி ம.தி.மு.க பொது செயலாளா் வைகோ உள்ளிட்டோா் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகளை தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி, நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரதசக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

சீமைக் கருவேல மரங்கள் (Prosopis juliflora trees)

தமிழகத்தில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்றுதல் குறித்து இறுதி கொள்கை முடிவெடுக்க தமிழக அரசு 8 வாரங்கள் கோரிக்கை விடுத்திருந்தது. இதனையடுத்து இறுதி கொள்கை முடிவெடுக்க அரசு கேட்ட 2 மாதங்கள் அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்குகள் ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

எப்படி அழிப்பது? (How To Kill)

சீமைக்கருவேல மரங்களை அடியோடு அழித்துக் கட்டுவது சாத்தியமே. வெட்ட வெட்டத் துளிர்க்கும் தன்மை கொண்டது என்பதால், சீமைக்கருவேல மரங்களை இயந்திரங்களைக்கொண்டு வேரோடு பிடுங்கி அழிப்பதுதான் நிரந்தரத் தீர்வு. ‘ஆசிட்’ அல்லது வேறு வகையான மருந்துகள் மூலம் முயற்சித்தால் மண் வளம்தான் கெட்டுப்போகும்.

இம்மரங்களை வேரோடு அகற்றிய பின் அந்த நிலங்களில் பயன் தரும் மரங்களை வனத் துறையினர் உதவியோடு இலவசமாக நட வேண்டும். அதனை 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் உள்ள பணியாளர்களைக்கொண்டு, மூன்று வருடங்களுக்குத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.

மேலும் படிக்க

விவசாய இடுபொருட்களை கட்டாயமாக விற்பனை செய்தால் உரிமம் ரத்து!

தரிசு நிலத்தை வாங்கி தோட்டத்தை உருவாக்கிய நடிகை தேவயானி!

English Summary: Final policy decision to remove Prosopis juliflora trees: Chennai High Court!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.