நாடு முழுதும் நவம்பர் 30க்குள், 90 சதவீதம் பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடுவதற்காக, 'வீடு வீடாக தட்டுங்கள்' என்ற தடுப்பூசி விழிப்புணர்வை மத்திய அரசு துவங்கி உள்ளது.
விழிப்புணர்வு திட்டம்
வீடு வீடாக சென்று, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் விழிப்புணர்வு திட்டம் குறித்து, மத்திய சுகாதாரத் துறை கூடுதல் செயலர் மனோகர், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பேசியதாவது: நாடு முழுதும், 18 வயதுக்கு மேற்பட்டோர், இதுவரை 80 சதவீதம் பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 39 சதவீதம் பேர், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.
நாட்டின் சராசரி தடுப்பூசி சதவீதமாக 38 உள்ளது. ஆனால் இந்த சராசரி சதவீதத்தை, தமிழகம், பஞ்சாப், நாகலாந்து, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா உட்பட, பல்வேறு மாநிலங்கள் எட்டவில்லை. எனவே வரும் 30ம் தேதிக்குள் நாடு முழுதும் 18 வயதுக்கு மேற்பட்டோர், 90 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, வீடு வீடாக தட்டுங்கள் என்ற தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் துவங்கப்பட்டுள்ளது.
இந்த விழிப்புணர்வு படி வீடு வீடாக சென்று 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி உள்ளளனரா, இல்லையா என ஆய்வு செய்து, தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதற்கு, அனைத்து மாநிலங்களின் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் தடுப்பூசி அதிகாரிகள் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க
உலகிலேயே முதல்முறையாக கழுதைப்புலிக்கும் கரோனா தொற்று!
தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம்: புதிய வகை கொரோனா வைரஸ் பரவும் அபாயம்!
Share your comments