ஆழ்கடலில் வசிக்கும் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு எதுவாக இருக்க 60 நாட்கள் வரை விசை படகுகள் கடலுக்குள் செல்ல அரசு தடை விதிக்கும். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இத்தடை உத்தரவானது 45 நாட்களாக இருந்து 60 நாட்களாக அதிகரிக்க பட்டுள்ளது. மீனின் இனப்பெருக்க காலமாக ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை, 60 நாட்கள் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்ல அரசு தடை விதித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் இந்த தடை உத்தரவு சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான 13 மீனவ மாவட்டங்களுக்கு பொருந்தும்.
ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துகுடி, தஞ்சை, குளச்சல் , நீலாங்கரை வரை உள்ள கிழக்கு கடற்கரை துறைமுகங்களில் உள்ள 13 மாவட்டங்களை சேர்ந்த 5000 அதிகமான விசை படகுகள் நங்குரமிட்டு கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மீன் பிடிக்க உதவும் உபகரணங்களுடன் கரை நோக்கி, வாழ்வாதாரத்தை தேடி மீனவர்கள் செல்ல தொடங்கி விட்டனர். சிலர் வாழ்வாதாரத்துக்கு வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செல்ல தயாராகி வருகின்றனர்.
பல கோடி அந்நிய செலவாணி ஈட்டு தரும் இத்தொழிலை நம்பி 4 லட்சத்திற்க்கும் அதிகமான மீனவர்களும், 10 லட்சத்திற்க்கும் அதிகமான மறைமுக தொழிலார்களும் பாதிக்க படுகின்றனர். மீனவர்களின் தற்போதைய கோரிக்கையாக தடை காலத்தில் வழங்கும் மானியத்தை 5000 முதல் 10000 வரை உயர்த்தி தர வேண்டும். மேலும் இலங்கை மீனவ பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டும். நெய்தல் நில மக்களின் கோரிக்கை அரசு செவி மடுக்கும் என நம்புவோம்.
Share your comments