1. செய்திகள்

flu fever எதிரொலி:பள்ளிகளுக்கு விடுமுறை?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Flu fever echo: Holidays for schools?

காய்ச்சல் அதிகரித்து வருவதன் காரணமாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநரகத்துக்கு புதுச்சேரி மாநில அரசு பரிந்துரைத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களால் ஃப்ளு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சளி, இருமலுடன்கூடிய இநத காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிதது வருவது அதிர்ச்சி தகவல் என்றாவ், இவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள் மற்றும் பள்ளி சிறார்கள் என்பது நமக்கு அதிர்ச்சி தரக்கூடியத் தகவல்.

10 நாட்களாக

குறிப்பாக தலைநகர் சென்னையில் ஃப்ளூ காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதேபோன்று, தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் ப்ளு காய்ச்சலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு காய்ச்சல் காரணமாக வருவோரின் எண்ணிக்கை, கடந்த 10 நாட்களாக அதிரடியாக அதிகரித்து வருகிறது. அவ்வாறு, காய்ச்சலுக்காக சிகிச்சைக்கு வருபவர்களில் 50% மேற்பட்டவர்கள் சிறுவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை

இதனையடுத்து, மாணவர்களின் நலன் கருதி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநரகத்துக்கு புதுச்சேரி மாநில சுகாதாரத் துறை பரிந்துரைந்தது. இந்தப் பரிந்துரையை ஏற்று புதுச்சேரி மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விரைவில் விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா

கொரோனா காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் முழுவீச்சில் இயங்காத நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல்தான் பள்ளிகள் சரிவர செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தற்போது ஃப்ளு காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை அளிக்கும் சூழல் உருவாகி உள்ளது.

மேலும் படிக்க...

துப்புரவு பணியாளரை காதலித்து கரம் பிடித்த பெண் டாக்டர்!

ராஜினாமா செய்பவர்களுக்கு 10% சம்பள உயர்வு!

English Summary: Flu fever echo: Holidays for schools? Published on: 17 September 2022, 10:25 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.