1. செய்திகள்

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் சிகிக்சை

KJ Staff
KJ Staff
Arun Jaitley

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல்நல குறைவால் கடந்த வாரம்  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சு திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் தொடர்ந்து  தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரின் உடல்நிலை சற்று மோசமானதால்  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்,  பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளனர்.  

இதுதொடர்பாக மருத்துவமனை வெளியிடப்பட்ட அறிக்கையில், அருண் ஜெட்லியின் உடல்நிலையை தற்போது சீராக இருப்பதாகவும்,  மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் அவர் மருத்துவ சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும், விரைவில் நலம் பெறுவார் எனவும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, கார்டியோ-நியூரோ மையத்தின்  மருத்துவர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாக என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Anitha Jegadeesan
Krishi Jagran 

English Summary: Former Finance Minister Arun Jaitley to the All India Institute of Medical Sciences (AIIMS): Undergoing For Treatment

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.