
கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பயிர் பாதுகாப்பு மையத்தின் சார்பில் நடைபெற்ற நான்கு நாள் உலகளாவிய பயிர் பாதுகாப்பு ஆராய்ச்சி கருத்தரங்கின் நிறைவு விழா 21.02.2025 அன்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அண்ணா கலையரங்கத்தில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கிற்கு தமிழ்நாடு, மற்ற மாநிலங்கள் மற்றும் உலக அளவில் இருந்து 460 விஞ்ஞானிகள், இளநிலை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் ஆகியோர் பங்கேற்று ஒன்பது தலைப்புகளில் கீழ் அவர்களுடைய ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
கருத்தரங்கின் முக்கிய அம்சங்கள் :
இந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற தமிழ்நாடு அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் முதன்மைச் செயலாளர் முனைவர் பா.செந்தில் குமார் விவசாயத்தில் அணைத்து தொழில்நுட்பங்களையும் ஒருங்கிணைத்து சாகுபடி செய்யும் பொழுது விவசாயிகள் செலவினை குறைத்து அதிக லாபம் பெற இயலும் என்று கூறினார். மேலும் பயிர் பாதுகாப்புத் துறையில் செய்யப்படும் முன்னோடி ஆராய்ச்சிகளின் முக்கியத்துவத்தை பற்றி அவர் பாராட்டினார். இந்த வகை ஆராய்ச்சிகள் விவசாயிகளுக்கு எளிதில் தொழில்நுட்பங்களை கொண்டு பொய் சேர்க்கும் என்பதனை அவர் கூறினார். மத்திய அரசின் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் வேளாண் ஆணைய முனைவர் பி.கே சிங்க் தொழில்நுட்ப உரையில் மனிதர்கள், விவசாயம், விலங்குகள் மற்றும் சுற்றுசூழலுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் சிறந்த பலனை பெற சுற்றுசூழல் சார்த்த இடுபொருட்களை பயன்படுத்த வேண்டும் என்றார்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பயிர் பாதுகாப்பு இயக்குனர் முனைவர் மூ.சாந்தி ஒன்பது தலைப்புகளில் கீழ் நடைபெற்ற ஆராய்ச்சி விவாத செயல்பாடுகளை பற்றி அனைவருக்கும் எடுத்துரைத்தார். விஞ்ஞானிகள் ஒருவருடன் ஒருவர் கலந்துரையாடி அவர்களுடைய பிரிவில் ஆராய்ச்சி ஒப்பந்தங்களை மேற்கொள்ள இவ்வகையான கருத்தரங்கு மிகவும் சிறந்த தளமாக அமையும் என்று கூறினார்.
மேலும் இந்த கருத்தரங்கில் பேசிய மத்திய பட்டு வளர்ச்சி நிறுவனத்தின் உறுப்பினர் செயலர் பி.சிவகுமார் அதீத பூச்சிக்கொல்லி உபயோகித்தால் பட்டுப்புழு உற்பத்தியில் ஏற்படும் சாதக பாதகங்களை பற்றி இந்த நிகழ்வில் எடுத்துரைத்தார். குறிப்பாக மா சாகுபடி செய்யும் பகுதிகளான தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி பகுதிகளில் உபயோகப்படுத்தும் பூச்சிக்கொல்லிகள் பட்டுக்கூடு உற்பத்தியில் விவசாயிகள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர் என்றும் எனவே அப்பகுதி விவசாயிகள் பட்டுப்புழுவிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பயிர் பாதுகாப்பு முறைகளை உபயோகிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முன்தன்மையர் நிரஞ்சன் இவ்வாறான பன்னாட்டு கருத்தரங்குகள் அணைத்து விஞ்ஞானிகளையும் ஒன்று கூட வைத்து அந்தந்த துறையில் எவ்வாறு முன்னோடி ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன என்பதை விவாதிப்பதற்கு ஒரு தலமாக அமைகிறது என்றும் இதனை அனைவரும் உபயோகப்படுத்தி தங்களுடைய ஆராய்ச்சி பணிகளை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தேசிய வேளாண் வளர்ச்சி வங்கியின் கோயம்புத்தூர் மாவட்ட துணை இயக்குனர் திருமலை ராவ், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் விவசாயிகளின் நலனை நோக்கி உள்ளது என்றும் மேலும் விவசாயிகளுக்கு சிறந்த தொழில்நுட்பங்களை கொண்டு சேர்க்க புதிய திட்டங்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்வில் சிறந்த கட்டுரைகளை சமர்ப்பித்த விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் நூற்புழுவியல் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கா. தேவராஜன் வரவேற்புரையும் மற்றும் பட்டுப்புழு துறையின் பேராசிரியர் மற்றும் முனைவர் டி. சித்தேஸ்வரி நன்றியுரையும் வழங்கினார்கள்.
Read more:
வேளாண் நிதிநிலை அறிக்கை 2025 : 9 மாவட்ட விவசாயிகளிடம் அமைச்சர்கள் கருத்துக்களை கேட்டறிந்தனர்
உயிர்ம வேளாண்மை உற்பத்தியாளர் ஆக விரும்புவோருக்கு சிறப்பு பயிற்சி
Share your comments