1. செய்திகள்

விலையில்லா மிதிவண்டி, அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய முக ஸ்டாலின்

T. Vigneshwaran
T. Vigneshwaran
Free Bicycle

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11,12-ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை இன்று சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலைக் கல்வி 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கு அரசின் சார்பில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் புதிய மிதிவண்டிகள் ஏதும் வழங்கப்படாத நிலையில், நடப்பு கல்வியாண்டில் 11 மற்றும் 12ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்க டெண்டர் கோரப்பட்டு, அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு மிதிவண்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

இன்று முதல் மாநிலம் முழுவதும் உள்ள பிற பள்ளிகளிலும், ஏற்கனவே தயார் நிலையில் உள்ள மிதிவண்டிகள், மாணவர்களிடம் வழங்கப்பட உள்ளன. முதற்கட்டமாக 12-ம் வகுப்பில் பயிலும் 6.5 லட்சம் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக 323 கோடியே 3 லட்சம் மதிப்பீட்டில் மிதிவண்டிகள் ஒப்பந்தம் கோரப்பட்டு வரவழைக்கபட்டுள்ளன. இதற்கு முன்பாக பச்சை , அடர் சிவப்பு உள்ளிட்ட கலர்களில் சைக்கிள்கள் வழங்கப்பட்ட நிலையில் நடப்பாண்டு அடர் நீலம் நிறத்தில் சைக்கிள் வழங்கப்படுகிறது.


கடந்த முறை இலவசமாக வழங்கப்பட்ட சைக்கிள்களில் தமிழக அரசு சின்னம் மற்றும் முதலமைச்சர் புகைப்படம் இடம் பெற்ற நிலையில் நடப்பாண்டில் முதலமைச்சரின் புகைப்படம் இடம்பெறவில்லை அதேசமயம் தமிழக அரசின் சின்னம் மற்றும் அதனுடன் மிதிவண்டி இயக்குவதால் ஏற்படும் பயன்கள் குறித்தான வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.

குறிப்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு , இருதய பாதுகாப்பு , ஆரோக்கியமான வாழ்வு , புதிய வெப்பமடைதலை தவிர்த்தல் , ஆற்றல் சேமித்தல் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளது.இதனிடையே அடுத்த ஒரு மாத காலத்துக்குள் 11 ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கும் மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மா சுப்பிரமணியன் , சேகர்பாபு ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க:

கடலில்மீனவர்களுக்கு கிடைத்த ரூ.28 கோடி மதிப்பிலான புதையல்

English Summary: Free bicycle given to government school students by Mk Stalin Published on: 25 July 2022, 02:40 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.