மாநிலத்தைச் சேர்ந்த 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாகக் கொரோனாத் தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதிகரிக்கும் கொரோனா (Increasing corona)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்த நிலையில், கடந்த சில நாட்களாக கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
கட்டுப்பாடுகள் (Restrictions)
நீண்ட நாட்களுக்குப் பிறகு தினசரி பாதிப்பு 12,ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. இதனால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம், இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என பல்வேறுக் கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியுள்ளது.
தடுப்பூசிப் போடும் பணி (The task of vaccination)
இது ஒருபுறம் இருக்க, தடுப்பூசி போடும் பணியும் மறுபுறம் தீவிரமடைந்துள்ளது.
அரசு அறிவிப்பு (Government Announcement)
இந்தநிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,
மே 1ந்தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்.
தடுப்பூசி முகாம் (Vaccination camp)
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி முகாம் நடத்தப்படும்.
மருத்துவப் பரிசோதனைகள் (Medical Experiments)
கொரோனா தொற்றை 10% கீழ் குறைக்க ஏதுவாக RT-PCR பரிசோதனைகள் மேலும் உயர்த்தப்படும்.
தற்காலிக உரிமை (Temporary right)
ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முன்வரும் தொழிற்சாலைகளுக்கு உடனடியாக தற்காலிக உரிமம் வழங்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசிக்கு ஏப்ரல் 24 முதல் முன்பதிவு துவக்கம்! 18 வயதை கடந்தவர்கள் பதிவு செய்யலாம்!
கொரோனாப் பற்றி வதந்தி பரப்பினால் ரூ.20 கோடி அபராதம்!
கொரோனா 2வது அலை : ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு நோய் தொற்று உறுதி!
Share your comments