1. செய்திகள்

திருக்குறள் சொன்னால் Earphone இலவசம்.. அசத்தும் மொபைல் ஷாப்!!

Sarita Shekar
Sarita Shekar

தமிழ் மொழியின் கூற எத்தனையோ காவியங்களும் இலக்கியங்கள் இருந்தாலும், தமிழ் என்றாலே உடனே அனைவருக்கும் திருக்குறளும், பாரதியார் கவிதைகளும் தான். தமிழை வளர்க்க பலரும் பல உத்திகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், 10 திருக்குறள் கூறினால்,  ஒரு Ear phone மற்றும் மாஸ்க் இலவசம் என்ற அறிவிப்பால் தனியார் செல்போன் (Mobile Shop) கடையில் மாணவ, மாணவிகள் அலைமோதியுள்ளனர்.

தமிழக அளவில் தற்போது பள்ளி மாணவ, மாணவிகளிடையே மட்டுமில்லாமல், கல்லூரி மாணவ, மாணவிகளிடையேயும், பெருமளவில் திருக்குறள் கற்கும் ஆர்வம் அதிகரித்து வருகின்றன. காரணம், திருக்குறள் (Tirukkural) எந்த மதத்தினையும் சார்ந்தது அல்ல, எந்த சமயத்தினையும் சார்ந்தது அல்ல, பொதுவானது. இந்நிலையில், கரூர் செங்குந்த புரத்தில் ஸ்ரீயா மொபைல் என்கின்ற தனியார் மொபைல் கடையில், கரூர் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மட்டுமில்லாமல் தமிழ் ஆர்வலர்கள் என்று ஏராளமானோர் திருக்குறள் 10 சொன்னால் ஒரு Ear Phone இலவசம் என்றும், அதனுடன் கொரோனாவினை (coronavirus) தடுக்கும் மாஸ்க்கும் இலவசம் என்றும் அறிவித்தது.

இதனால், மாணவ, மாணவிகள், தமிழ் ஆர்வலர்கள் தினந்தோறும் சென்று 10 திருக்குறள் சொல்லி, அவர்களுக்கு இலவசமாக கொரோனாவினை தடுக்கும் மாஸ்க் (Face Mask) மற்றும் இலவச Ear Phone-யை இலவசமாக வாங்கி செல்கின்றனர். இந்நிகழ்ச்சிக்கு கருவூர் திருக்குறள் பேரவை நிறுவனத்தலைவர் மேலை. பழநியப்பன் நடுவராக கலந்து கொண்டும், பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினர். ஸ்ரீயா மொபைல்ஸ் என்கின்ற தனியார் மொபைல் கடையின் நிறுவன பங்குதாரர்கள் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை சிறப்பாக செய்திருந்தனர்.

இதற்கு முன்னதாக, கரூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 10 திருக்குறள் சொன்னால் ½ லிட்டர் பெட்ரோல் இலவசம், 20 திருக்குறள் சொன்னால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம் என்கின்ற திட்டத்தினை, கரூர் வள்ளுவர் பெட்ரோல் பங்க் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English Summary: Free Earphone , if you say Thirukkural.. Awesome mobile shop !! Published on: 12 April 2021, 04:14 IST

Like this article?

Hey! I am Sarita Shekar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.