செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு இலவச ரேஷன் திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநில அரசுகள் மட்டுமல்லாமல் மத்திய அரசின் உதவியும் இதன் மூலம் கிடைக்கிறது. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ரேஷன் அரிசி (Ration Rice)
கடந்த 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடங்கியபோது மத்திய அரசிடமிருந்து ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKY) திட்டத்தின்கீழ் ஒரு யூனிட்டுக்கு 5 கிலோ கோதுமை - அரிசி கோதுமை கூடுதலாக வழங்கப்பட்டது. இத்திட்டம் பொதுமக்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது. ரேஷன் கார்டு மூலமாக அரசின் இலவச ரேஷன் திட்டத்தை நீங்களும் பயன்படுத்துபவராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு முக்கியமானது. புதிய அப்டேட்டின்படி, இனி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் உணவு தானியங்களை காசு கொடுத்தே வாங்க வேண்டும்.
உத்தரப் பிரதேச மாநில அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய உத்தரவின்படி, செப்டம்பர் மாதம் முதல் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச ரேஷன் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவச அரிசி செப்டம்பர் மாதம் வரை மட்டுமே கிடைக்கும்.
அதிக செலவு
கொரோனா பிரச்சினை இந்தியாவில் நீடித்து வந்ததால் இலவச ரேஷன் திட்டமும் நீட்டிக்கப்பட்டது. செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு கோதுமை கிலோ ஒன்றுக்கு 2 ரூபாயும், அரிசிக்கு 3 ரூபாயும் வழங்க வேண்டும். செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு ரேஷன் கார்டில் பொருட்கள் வாங்குவோருக்கு அதிகம் செலவாகும்.
மேலும் படிக்க
கந்துவட்டி கொடுமையா? தப்பிக்க வழிகாட்டும் சட்டம்!
இலவசங்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு!
Share your comments