
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் (Farmers Training Center) காளான் மற்றும் காடை வளர்ப்பு குறித்து அடுத்த மாதம் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
எதையும் முறையாகக் கற்றுக்கொண்டால், திறம்பட செயலாற்றி, எண்ணிய இலக்கை அடைய முடியும். அந்த வகையில், காளான், காடை, நாட்டுக்கோழி, வெள்ளாடு உள்ளிட்டவற்றை வளர்ப்பதில் உள்ள யுக்திகளைக் கற்றுக்கொண்டால், அதிக லாபம் ஈட்ட முடியும்.
அவ்வாறு கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ளவர்களுக்காக சிவகங்கை மாவட்டத்தில் பிள்ளையார்பட்டியில் இயங்கிவரும், பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் உழவர் பயிற்சி மையம், அவ்வப்போது பயிற்சிகளை அளித்து ஊக்குவித்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக வரும் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் இலவச பயிற்சிகள் அட்டவணை:
6.10.2020 காளான் வளர்ப்பு மற்றும் சந்தை படுத்துதல்
8.10.2020 லாபகரமான முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு
13.10.2020 செம்மறி மற்றும் வெள்ளாடு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள்
15.10.2020 இயற்கை விவசாய வழிமுறைகள்
20.10.2020 காடை வளர்ப்பு தொழில் நுட்பங்கள்
22.10.2020 பண்ணைக்குட்டையில் மீன் வளர்ப்பு தொழில் நுட்பங்கள்
முதலில் பதிவு செய்யும் 30 நபர்களுக்கு மட்டுமே முன்னுரிமை என்பதால், பதிவு அவசியம்.
இந்த பயிற்சிகளில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு, பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் உழவர் மையத்தின் இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் படிக்க...
அக்டோபர் 5ம் தேதி ஆன்லைன் காளான் வளர்ப்பு பயிற்சி! TNAU ஏற்பாடு!
Share your comments