காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் வாக்காளர்களுக்கு தேர்தல் வாக்குகுறுதிகளை அளிப்பதால், பா.ஜ.க வாக்களர்களுக்கு சைக்கிள்கள், ஸ்கூட்டிகள், இலவச எரிவாயு சிலிண்டர்கள் அறிவித்துள்ளது. இதை பா.ஜ.க இலவச கவர்ச்சி அல்ல, அதிகாரம் என்று கூறுகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் அரசு இலவசங்கள் கலாச்சாரத்திற்கு எதிரான அழைப்பைத் தொடர்ந்து இலவசங்களுக்கு எதிராக கொள்கை நிலைப்பாட்டை எடுத்த பா.ஜ.க, குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்களில் சிக்கலான மோதலை எதிர்கொள்கிறது.
இமாச்சலப் பிரதேசத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட இமாச்சலப் பிரதேசத்திற்கான தேர்தல் அறிக்கையில், (சங்கல்ப் பத்ரா) அம்மாநிலத்தில் பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கப்படும் என்றும், உயர்கல்வி படிப்பவர்களுக்கு ஸ்கூட்டி வழங்கப்படும் என்றும் பா.ஜ.க அறிவித்துள்ளது.
வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள், கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.25,000 வழங்கப்படும் என்பது போன்ற வாக்குறுதிகளை பா.ஜ.க உறுதியளித்துள்ளது.
குஜராத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக, பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இரண்டு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்களை அம்மாநில பா.ஜ.க அரசு அறிவித்தது. குஜராத்தில், இன்னும் பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படவில்லை.
பா.ஜ.க தேசியத் தலைவர் சிம்லாவில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையை நியாயப்படுத்தியது. இவை இலவசங்கள் அல்ல, மாறாக பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் நடவடிக்கைகள் என்று கூறியது. இருப்பினும், தனிப்பட்ட முறையில், ஒரு மெல்லிய கோடு மக்கள் நலத் திட்டங்களையும் இலவசங்களையும் பிரிக்கிறது என்று அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள் – இது எதிர்க்கட்சிகள் முன்வைத்த வாதம்.
மேலும் படிக்க:
Share your comments