
கும்பகோணத்தில் ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த இட்லியில் தவளை இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை (Hospital treatment)
கும்பகோணம் அரசு மருத்துவமனை அமைந்துள்ள சாலையில் ஏராளமான ஹோட்டல்கள் உள்ளன. கும்பகோணம் மாடாகுடியை சேர்ந்தவர் முருகேசன். இவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினருக்கு அந்த சாலையில் இருந்த தனியார் ஹோட்டலில் இருந்து சில இட்லிகளை பார்சல் வாங்கிச் சென்றுள்ளார்.
இட்லியில் தவளை (Frog in Itly)
பின்னர் அரசு மருத்துவமனைக்கு சென்றவுடன் அந்த பார்சலை நோயாளி பிரித்து இட்லியை சாப்பிட முயன்றார். அப்போது இட்லியில் தவளை ஒன்று இறந்து கிடந்தது. இதனை பார்த்த நோயாளிக்கு தூக்கி வாரிப்போட்டது. அதிர்ச்சி அடைந்த நோயாளியின் உறவினர் உடனடியாக பார்சல் வாங்கி வந்த இட்லியை எடுத்துக்கொண்டு அந்த ஹோட்டலுக்கு சென்று ஹோட்டல் உரிமையாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
அப்போது ஹோட்டலில் இருந்தவர்கள் இட்லி வாங்கி சென்றவரை சமாதானப்படுத்தி உள்ளார். இதுபற்றி வெளியே கூற வேண்டாம் என்று கூறியபடி அவர் வாங்கிச் சென்ற இட்லிக்கு உண்டான பணத்தை கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து இட்லி ஊற்ற வைத்திருந்த மாவை இட்லி வாங்கியவரின் கண்முன்னே ஹோட்டல் உரிமையாளர் கீழே கொட்டி உள்ளார். இந்த பிரச்சனை பெரிதாக மாறக்கூடாது என்று கருதி மாறவே ஹோட்டலை உடனடியாக பூட்டிவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் வைரல்
ஆனால் ஹோட்டலில் இருந்த ஒரு நபர் இந்த காட்சிகளை வீடியோ வீடியோ எடுத்து டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இட்லியில் தவளை கிடந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பொதுமக்கள் கோரிக்கை (Public demand)
இதுபோன்று உணவை அஜாக்கிரதையாக சமைத்த ஹோட்டல் உரிமையாளருக்கு அபராதம் விதிப்பதோடு, ஹோட்டலை மூடி சீல் வைக்க வேண்டும் என நகராட்சி சுகாதார துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க...
Share your comments