கொரோனா ஊரடங்கிற்கு பிறகு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 -12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் சுழற்சி முறையில் வகுப்புகள் தொடங்கப்பட்டன. அவர்களை தொடர்ந்து 1-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 1 ஆம் தேதி முதல் சுழற்சி முறையிலேயே பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தொடர் மழை காரணமாக நவம்பர் மாதத்தில் பெரும்பாலான நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது ஜனவரி 2 ஆம் தேதி வரை, ஒரு வாரம் அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முழுநேர வகுப்புகள் (Full Time Classes)
இந்த நிலையில், விடுமுறை முடிந்து ஜனவரி 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்போது, தற்போது நடைமுறையில் உள்ள சுழற்சிமுறை வகுப்புகளுக்கு பதிலாக வழக்கம்போல் முழுநேர வகுப்புகளை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.
மாணவர்களின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த முக்கிய முடிவை செயல்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்து ஆலோசிக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் (CEO) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
ஆலோசனை (Discussion)
வரும் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 28) சென்னையில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பள்ளிகளை வழக்கம்போல் முழுநேரமும் இயக்குவதில் நிர்வாக ரீதியாக உள்ள சிக்கல்கள், மாணவிகள் மீதான பாலியல் தொல்லை, ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார், நெல்லை பள்ளி கட்டட விபத்து, அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கவுன்சிலிங் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
மேலும் படிக்க
Share your comments