1. செய்திகள்

இயற்கை மூலப் பொருட்களைக் கொண்டு, விநாயகர் சிலைகளை வடிவமைக்க வேண்டும் – சத்குரு வேண்டுகோள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Ganesha idols should be made of natural ingredients - Satguru's request!

விநாயகர் சதுர்த்திக்கு பயன்படுத்தும் விநாயகர் சிலைகளை சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை மூலப் பொருள்களைக் கொண்டு தயாரிக்க வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கேட்டுக்கொண்டுள்ளார்.

விநாயகர் சதுர்த்தி (Ganesha Chaturthi)

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

விநாயகர் இந்தியாவில் இருக்கும் கடவுள்களில் மிகவும் அழகானவர். தன்னுடைய அன்பானத் தன்மையாலும் குணத்தாலும் அவர் உலகம் முழுவதும் வணங்கப்படுகிறார். இந்தியாவிலும் உலகின் பல பகுதிகளிலும் விநாயகர் சதுர்த்தி ஒரு முக்கியப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

இயற்கை மூலப் பொருட்கள் (Natural raw materials)

இந்தப் பண்டிகையின் போது, நாம் வணங்கும் விநாயகர் சிலைகளை மண், சிறுதானியம், மஞ்சள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை மூலப் பொருட்களைக் கொண்டுத் தயாரிப்பதே சாலச் சிறந்தது.

பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு தயாரித்தால் அதை நீரில் கரைக்க முடியாது. பானைகள் செய்வதை போல் சுடு மண்ணில் தயாரித்தாலும் அதைக் கரைக்க முடியாது. மேலும், சிலையின் மீது செயற்கை வர்ணங்களைப் பூசினால் அதுவும் நீரை மாசுப்படுத்தும்.

நீர்நிலைகளில் கரைத்தல் (Dissolution in water)

ஆகவே, நீரில் கரையும் தன்மை கொண்ட இயற்கை மூலப் பொருட்களைக் கொண்டு மட்டுமே விநாயகர் சிலையைத் தயாரித்து இவ்விழாவை கொண்டாட வேண்டும்.

ஒரு கடவுளை உருவாக்கி, அதை நீரில் கரைக்கும் சுதந்திரத்தை விநாயகர் சதுர்த்தி பண்டிகை நமக்கு வழங்குகிறது. அதை நாம் மிகச் சரியாக பயன்படுத்த வேண்டும்.

கலாச்சாரத்தைப் பாதுகாக்க (To preserve culture)

நம் கலாச்சாரத்தை பாதுகாப்பதற்கும் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவதற்கும் இதுவே சிறந்த வழி என்று கூறியுள்ளார். எந்த மண்ணிலிருந்து உருவெடுத்தாரோ அதனுள்ளேயே மீண்டும் கரைந்திட விரும்புகிறார். அவர் கரைந்துபோக இயற்கையான பொருட்களால் அவர் உருவம் உருவாக்கப்பட வேண்டும். 

இவ்வாறு ஜக்கி வாசுதேவ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க...

2 நாட்களில் 1.23 லட்சம் மரக்கன்றுகள் நடவு- காவேரி கூக்குரல் இயக்கம் ஏற்பாடு!

நவீன விவசாய உலகில், விவசாயிகள் ஒன்று கூடினால் சாதிக்கலாம்

English Summary: Ganesha idols should be made of natural ingredients - Satguru's request! Published on: 07 September 2021, 07:29 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.