1. செய்திகள்

இந்திய புவிசார் குறியீடு

KJ Staff
KJ Staff

ஒரு குறிப்பிட்ட புவிசார்ந்த இடத்தையோ அல்லது தோற்றத்தையோ (எ.கா. நகரம், வட்டாரம், நாடு) குறிக்கும்படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம் புவிசார் குறியீடு (Geographical Indication) எனப்படும். இந்த குறியீடு, அந்த பொருள் புவிசார்ந்து பெறும் தரத்தையோ, நன்மைதிப்பையோ சாற்றும் சான்றாக விளங்கும். இவ்வாறு புவிசார் குறியீடு பெற்றிருக்கும் பொருளை சம்பந்தப்பட்ட ஊரைத் தவிர மற்ற இடங்களில் தயாரித்து சந்தைப்படுத்த முயல்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும்.

இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் அதன் நிலப் பகுதிக்கேற்ப தனித்தனி பண்புகள், அடையாளங்கள் கொண்ட புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.பகுதிசார் பொருள்களின் விளைச்சல், அப்பகுதி மக்களின் தொழில்கள் மூலம் அப்பகுதி இந்தியா மட்டுமல்ல சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழ்கின்றன. 

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் பட்டுச் சேலை, தஞ்சாவூர் கலைத்தட்டு, திருப்பதி லட்டு, மதுரை மல்லிகைப் பூ, மதுரை சுங்குடி சேலை, சேலம் மாம்பழம், தஞ்சாவூர் ஓவியப் பாணி, பத்தமடை பாய் ஆகியவை புவிசார் குறியீடு பெற்றுள்ளன.

இந்தியாவில் புவிசார் குறியீடுகள் சட்டம் (பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம்) 1999ஆம் ஆண்டு,  நிறைவேற்றப்பட்டது. இந்தியாவில் பொருட்கள் தொடர்பான புவிசார் குறியீடுகள் பதிவு மற்றும் பாதுகாப்புக்கு இந்த சட்டம் வழி வகுக்கிறது. 

தமிழ் நாட்டின் புவிசார் குறியீடு           

ஊர்களும் நகரங்களும் பல இருந்தாலும் சில ஊர்கள் மட்டும் ஒரு சில பொருள்களுக்காகவும் அவற்றின் தரத்திற்காகவும் மிகவும் சிறப்பாக அறியப்படுகின்றன. இவ்வாறு அறியப்படும் பொருள்களுக்குத் தற்போது புவிசார் குறியீடு  (Geographical Indication) வழங்கும் முறை கூட உள்ளது.

தமிழ் நாட்டில் நாற்பதிற்கும் மேற்பட்ட புவிசார் குறியீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றுள் சில

வ. எண்

ஊர் பெயர்

சிறப்பு

1

பண்ருட்டி

பலாப்பழம்

2

சேலம்

மாம்பழம், வெண்பட்டு

3

மதுரை

மல்லிகைப்பூ, சுங்குடி சேலை

ஜிகர்தண்டா

4

திருவண்ணாமலை

 

சாமந்திப்பூ, அரளிப்பூ,  குண்டு மாங்காய், வாழைப்பழம்

5

பழனி

பஞ்சாமிர்தம்

6

தூத்துக்குடி

மக்ரூன் , உப்பு

7

கோவில்பட்டி

கடலை மிட்டாய்

8

திருநெல்வேலி

அல்வா

9

பரங்கிப்பேட்டை

அல்வா

10

ஸ்ரீவில்லிபுத்தூர்

பால்கோவா

 

இந்தியப் பொருட்கள்

195 இந்தியப் பொருட்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு வழங்கப் பட்டுள்ளது. இதில் விவசாயம் மற்றும் உணவு சார்ந்த பொருட்கள் 57. புவிசார் குறியீட்டிற்கான சட்டம் 1999ம் ஆண்டு இயற்றப்பட்டு 2003ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது.

English Summary: Geographical Indication Published on: 12 October 2018, 03:32 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.
News Hub