1. செய்திகள்

தக்காளி விவசாயி பயிருக்கு ஏக்கருக்கு ரூ1,017.64 பிரீமியம் செலுத்தி பயிர் காப்பீடு செய்யுங்கள்

Deiva Bindhiya
Deiva Bindhiya
Get crop insurance by paying a premium of Rs 1,017.64 per acre per tomato farmer's crop

நாமக்கல் மாவட்டத்தில், 2023-24-ம் ஆண்டு சிறப்பு மற்றும் ராபி பருவத்தில் நெல் (சம்பா), உளுந்து, பச்சைபயறு, நிலக்கடலை, சோளம், கரும்பு, சிறிய வெங்காயம், வாழை, தக்காளி மற்றும் மரவள்ளி பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிர்களை புதுபிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், பயிர் காப்பீடு செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் பிரிமியத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு நெல் (சம்பா) பயிருக்கு ரூ347.53-ஐ 15.12.2023-க்குள்ளும், சோளம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.128.03-ஐ 30.11.2023- க்குள்ளும், நிலக்கடலை பயிருக்கு ஏக்கருக்கு ரூ312.70-ஐ 31.12.2023 - க்குள்ளும், பச்சைபயறு மற்றும் உளுந்து பயிருக்கு ஏக்கருக்கு தலா ரூ207.48-ஐ 15.11.2023- க்குள்ளும், மற்றும் கரும்பு பயிருக்கு ஏக்கருக்கு ரூ2,914.60-ஐ 30.03.2024- க்குள்ளும் செலுத்த வேண்டும்.

மேலும், தோட்டக்கலை பயிர்களான சிறிய வெங்காயம் பயிருக்கு பிரிமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ2050.10-ஐ 30.11.2023- க்குள்ளும், வாழை பயிருக்கு பிரிமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ1857.44-ஐ 29.02.2024- க்குள்ளும், தக்காளி பயிருக்கு பிரிமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ1,017.64-ஐ 31.01.2024- க்குள்ளும், மற்றும் மரவள்ளி பயிருக்கு பிரிமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ1548.70-ஐ 29.02.2024- க்குள்ளும் செலுத்த வேண்டும்.

பயிர் காப்பீடு அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் மேற்கண்ட பயிர்களுக்கு உரிய பிரிமியத் தொகையை கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் சான்று, வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் (கணக்கு எண் மற்றும் IFSC CODE எண்ணுடன்), ஆதார் அட்டை நகல் மற்றும் கைபேசி எண் ஆகியவற்றுடன் வணிக வங்கிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலம் பிரீமியத் தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.

இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க:

Uzhavan App மூலம் பயிர் காப்பீடு செய்ய பயிர்கள் மற்றும் கட்டண விவரங்கள் அறிக | Agri News

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் பயனடைய விவசாயிகளுக்கு அழைப்பு PMFBY | Mushroom Farming | News

English Summary: Get crop insurance by paying a premium of Rs 1,017.64 per acre per tomato farmer's crop Published on: 12 October 2023, 06:09 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.