மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்த நிலையில், 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு தமிழக முதல்வர் பழனிசாமி (CM Palanisamy) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்பதிவு தொடக்கம்
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கி விட்டுள்ளன. தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், மே 1-ம் தேதி முதல் 18 வயதை கடந்த அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கான முன்பதிவு இன்று (ஏப்.,28) மாலை 4 மணிக்கு துவங்கியது.
முதல்வர் வேண்டுகோள்
இந்நிலையில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவரது டுவிட்டர் பதிவு: கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளின் பங்கு முக்கியமானது. இதனை கருத்தில் கொண்டு 1.5 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் தீவிரத்தை உணர்ந்து 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் தடுப்பூசி (Vaccine) செலுத்திக் கொள்ள வேண்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க
கொரோனா தடுப்பு நடவடிக்கை! நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்!
முழு ஊரடங்கால், வெறிச்சோடிய தமிழகம்! கொரோனா தடுப்பு நடவடிக்கை!
Share your comments