அடுத்த இரண்டு மாதங்களில் 3.50 லட்சம் பெண்களுக்கு வெள்ளாடு, நாட்டுக் கோழி வழங்கப்படும் என்று கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்
திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு முன் உதாரணமான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டார். தமிழகத்தில் பொது மக்களுக்கு நன்மை தரும் திட்டங்களை செயல்படுத்துவதில் துறை ரீதியாக போட்டி போட்டுக் கொண்டு அமைச்சர்கள் செயல்படுத்தி வருகின்றனர் என்றார்.
தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் சேலம் தலைவாசலில் கால்நடை பூங்கா அமைக்கும் கட்டுமானப் பணி 75 சதம் நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் கோழிப்பண்ணைகள் பல்லடத்தில் தான் அதிகம் உள்ளன என்றார். புணேவிற்கு அடுத்தபடியாக பல்லடத்தில் ரூ.13 கோடி மதிப்பில் கோழியின ஆராய்ச்சி மற்றும் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும், அடுத்த இரண்டு மாதங்களில் 3.50 லட்சம் பெண்களுக்கு வெள்ளாடு மற்றும் நாட்டுக் கோழி வழங்கப்படும் என்று கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்
மேலும் படிக்க...
Share your comments