தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 22 காரட் ஆபரணத் தங்கம் நேற்று கிராம் ஒன்றுக்கு 110 ரூபாய் உயர்ந்து 5560 ரூபாயாகவும், ஒரு சவரன் தங்கம் 880 ரூபாய் அதிகரித்து 44,480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை உயர்வு (Gold price raised)
கடந்த பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை 44,040 ரூபாயாக உயர்ந்ததே உச்சமாக இருந்தது. ஆனால் வரலாற்றில் இல்லாத அளவிற்கு நேற்று (18/03/2023) தங்கம் விலை உயர்ந்து மக்களை அதிர்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில், தங்கம் விலை மேலும் அதிகரிக்கலாம் என்றும் ஒரு சவரன் தங்கம் 50,000 ருபாயை எட்டும் என நகை விற்பனையாளர்கள் கணித்துள்ளனர். மேலும் அதற்கான காரணத்தையும் அவர்கள் விளக்கிய உள்ளார்கள்.
அமெரிக்க வங்கி திவால்
அமெரிக்காவில் இரண்டு வங்கிகள் திவாலானதால் தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்திருப்பதும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவடைவதும் தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என தங்க, வைர நகை விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார்.
விறு விறுவென அதிகரிக்கும் தங்கம் விலை கடந்த 10 நாட்களில் மட்டும் சவரனுக்கு 3,240 ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
தங்கத்தின் தூய்மையை தெரிந்து கொள்வது எப்படி?
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அகவிலைப்படியும் விரைவில் உயரும்!
Share your comments