தங்கம் விலை இந்த மாதத்தின் தொடக்கத்தில் சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து 37,920 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால், வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் மறுநாளே தங்கம் விலை 160 ரூபாய் உயர்ந்து, சவரன் 38,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
பின்னர், ஜூன் 14ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு 760 ரூபாய் அதிரடியாகக் குறைந்து 37,920 ரூபாயக்கு விற்பனையானது. அதனைத் தொடர்ந்து விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது.
சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, சவரன் 38,120 ரூபாய்க்கு விற்பனை செய்ப்பட்து. அதன்படி, கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் 4,765 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையில் சவரனுக்கு 256 ரூபாய் அதிரடியாகக் குறைந்துள்ளது. அதன்படி, ஒரு சவரன் 37,000 ரூபாய்க்கு கீழ் குறைந்து, 37,864 ரூபாய்குக் விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.32 குறைந்து ரூ.4,733 ஆக உள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.700 குறைந்து ரூ.65,300 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி 65.30 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ஒரு கிராம் 66 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க
Share your comments