தங்கத்தின் விலை ஒரு வாரமாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், மீண்டும் முருங்கை மரம் ஏறிய வேதாளத்தினை போல் 22 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 60 ரூபாய் அதிகரித்துள்ளது.
தங்கத்தின் மீதான மோகம் இன்றளவும் பொது மக்களிடையே அதிகமாகவே உள்ளது. ஆனால் கடந்த ஒருவாரமாக தங்கத்தின் விலை கணிசமான விலையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் இன்று கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் பொதுமக்கள்/ நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனிடையே இன்று சென்னையில் 22 கேரட தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 வரை விலை உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே வருத்தத்தை உண்டாக்கியுள்ளது.
சென்னையில் நேற்றைய 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.5,585 ஆக விற்ற நிலையில் இன்று ரூ.60 அதிகரித்து ரூ.5,645 ஆக விற்பனையாகிறது. சவரன் ஒன்றுக்கு ரூ.480 வரை அதிகரித்து ரூ.45,160 ஆகவும் விற்பனையாகிறது.
தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் தங்கத்தின் வர்த்தகத்தை தீர்மானிக்கும் முக்கிய மாநகரமாக சென்னை திகழ்கிறது.
வெள்ளி விலை:
அமெரிக்க டாலரின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற பணவீக்கம், பணமதிப்பிழப்பு போக்குகளைப் பொறுத்து வெள்ளி விலையில் மாற்றம் காணப்படுவது வழக்கம். அமெரிக்க டாலரின் மதிப்பு குறையும் போது, வெள்ளியின் விலை அதிகரிக்கிறது.
தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் அதிகரித்து ரூ.76.80 எனவும், கிலோ ஒன்றிற்கு 300 ரூபாய் வரை விலை அதிகரித்து ரூ.76,800 எனவும் விற்பனையாகிறது.
எதிர்பாராத இந்த விலையேற்றத்தால் நடுத்தர மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். இன்னும் ஒரிரு நாளில் சம்பளம் பெறும் நிலையில் தங்கத்தில் முதலீடு செய்ய நினைத்திருப்பவர்களின் கனவில் சற்று சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
மேலும் காண்க:
கூலித்தொழிலாளியின் வங்கி கணக்கில் ஒரே இரவில் 100 கோடி- நடந்தது என்ன?
Share your comments