சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 2- வது நாளாக இன்றும் சவரனுக்கு 232 ரூபாய் குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் 36,392 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தில் இந்த திடீர் சரிவு, தங்கம் வாங்கும் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடையச் செய்திருப்பதுடன் புது நம்புக்கையையும் அளித்துள்ளது.
முதலீடு (Investment)
தக தகவென மின்னும் தங்கம் நம் கண்களை எப்போதுமேக் கவர்ந்து இழுக்கும். குறிப்பாகத் தங்கம் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுவதால் சர்வதேசச் சந்தை முதல், உள்ளூர் சந்தை வரை அதன் விலையில் எப்போதுமே ஏற்ற இறக்கம் இருந்துகொண்டே இருக்கிறது.
தனி கவுரவம் (Individual honor)
எத்தனைதான் அணிகலன்களை அணிந்தாலும், தங்கம்தான் நமக்குத் தனி கவுரவத்தை உருவாக்கித் தருகிறது. அதுமட்டுமல்லாமல், தங்கத்தை அணிகலனாக மாற்றி அணியும்போது, பெண்களுக்கு தனி அழகும், புத்துணர்ச்சியும், பெருமையும் கிடைக்கிறது. இதன் காரணமாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ரூ.37,000
அந்த வகையில், சர்வதேச சந்தையில் நிலவிவரும் விலை மாற்றத்திற்கு ஏற்ப சென்னையிலும் ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்ற -இறக்கம் இருந்து வருகிறது. இதன் காரணமாக குடியரசுத் தினத்தன்று சவரன் ரூ.37 ஆயிரத்தை தாண்டியது.
27.01.22
அதேநேரத்தில் நேற்று சவரனுக்கு 472ரூபாய் அதிரடியாகக் குறைந்தது.
அன்று ஒரு கிராம் தங்கம் 4578 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 36624ரூபாக்கும் விற்பனை செய்யப்பட்டது.
2-வது நாளாக சரிவு (Decline on the 2nd day)
இந்த சரிவு இன்றும் தொடர்கிறது. தொடர்ந்து 2வது நாளாக இன்றும் கிராமுக்கு 29 ரூபாய் வீதம், சவரனுக்கு 232 ரூபாய் குறைந்துள்ளது.
இதன் மூலம் ஒரு கிராம் தங்கம் 4549க்கும், ஒரு சவரன் தங்கம் 36392க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
உகந்த நேரம் (Optimal time)
எனவே தங்கம் வாங்க விரும்புபவர்கள், மகளுக்கு தை, மாசி மாதங்களில் திருமணம் வைத்திருப்பவர்கள், இன்று கடைக்குச் சென்று தங்கம் வாங்கலாம்.
ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, தொடர்ந்து 2வது நாளாக சரிவில் இருப்பது, நடுத்தர, ஏழை மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
மேலும் படிக்க...
2022 பட்ஜெட்டும் டிஜிட்டல் முறையில் தாக்கல், எவ்வாறு நடக்கும் இந்த பணி?
தங்கம் விலை குறைந்துள்ளது, எவ்வளவு, விலை என்ன? விவரம் உள்ளே!
Share your comments