1. செய்திகள்

தங்கம் விலை சரிவை கண்டுள்ளது: இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

Deiva Bindhiya
Deiva Bindhiya
Gold prices price fall: Housewives rejoice!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தைப் பற்றி பார்க்கலாம்.

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிப்பது அனைவரும் அறிந்ததே. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்நிலையில், தங்கம் விலை 4வது நாளாக உயர்ந்து வந்ததை தொடர்ந்து, இன்று சற்று சரிவை கண்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி, சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.43,840-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ரூ.5,480க்கு விற்பனையானது.

இன்றைய (ஆகஸ்ட் 25) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.43,800-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ. 05 குறைந்து ரூ.5,475ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 5,945ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.47,560ஆக விற்பனையாகிறது.

வெள்ளி விலை ஒரு ரூபாய் 50 காசுகள் குறைந்து கிராம் வெள்ளி ரூ.79.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.79,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தங்கம் வாங்குவதற்கான நுகர்வோர் கொள்கை பற்றி அறிய மேற்கொண்டு படிக்கவும்.

150-க்கும் மேற்பட்ட தனியார்துறை மூலம் வேலைவாய்ப்பு: சிறப்பு முகாம் கலந்துக்கொள்ள அழைப்பு!

தமிழ்நாட்டில் தங்கம் வாங்குவதற்கான நுகர்வோர் கொள்கை:

தமிழ்நாட்டில் தங்கம் வாங்குவதற்கான நுகர்வோர் கொள்கைகள் தமிழ்நாடு சட்ட அளவியல் (அமலாக்கம்) விதிகள், 2011-ன் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன. தங்கம் வாங்கும் போது நுகர்வோர் மோசடி செயல்களில் இருந்து பாதுகாக்கப்படுவதை விதிகள் உறுதி செய்கின்றன.

சில முக்கிய கொள்கைகள் பின்வருமாறு:

தூய்மை: தங்க நகைகள் அதன் தூய்மையைக் குறிக்கும் அடையாளத்தைக் கொண்டிருக்க வேண்டும். தமிழகத்தில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எடைகள் மற்றும் அளவுகள்: தங்கத்தை எடைபோடுவதற்கு பயன்படுத்தப்படும் எடைகள் மற்றும் அளவுகள் சட்ட அளவியல் துறையால் அங்கீகரிக்கப்பட வேண்டும். விலைப்பட்டியலில் தங்கத்தின் எடை தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.

விலைப்பட்டியல்: ஒவ்வொரு தங்க நகை விற்பனையிலும் தங்கத்தின் எடை, தூய்மை மற்றும் விலை ஆகியவற்றைக் குறிப்பிடும் விலைப்பட்டியல் இருக்க வேண்டும்.

பரிவர்த்தனை/திரும்பக் கொள்கை [Exchange/Return Policy]: தங்க நகைகளை வாங்கிய 14 நாட்களுக்குள், தங்க நகைகளை அதன் அசல் நிலையில் இருக்கும்பட்சத்தில், அதை மாற்றவோ அல்லது திருப்பித் தரவோ நுகர்வோருக்கு உரிமை உண்டு.

பிஐஎஸ் சான்றிதழ் (BIS Certification): தமிழகத்தில் விற்கப்படும் தங்க நகைகளுக்கு இந்திய தர நிர்ணய பணியகத்தின் (பிஐஎஸ்) சான்றிதழ் கட்டாயம்.

குறை நிவர்த்தி: எந்தவொரு நியாயமற்ற நடைமுறைகளுக்கும் எதிராக நுகர்வோர் சட்ட அளவியல் துறையிடம் புகார் அளிக்கலாம்.

மேலும் படிக்க:

அக்ரி-கிளினிக்குகள் மற்றும் விவசாய வணிக மையம் நிறுவ அரசு உதவி எவ்வாறு பெறலாம்? அறிக

10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும் பல தொழிற் பிரிவுகளில் சான்றிதழுடன் வேலைவாய்ப்பு பெறலாம்

English Summary: Gold prices price fall: Housewives rejoice! Published on: 25 August 2023, 11:38 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.