கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் எதிரொலியால் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சரிவு காணப்பட்ட நிலையில் தற்போது அதிரடி திருப்பமாக தங்கத்தின் விலையில் உயர்வு காணப்படுகிறது, இன்று தங்கம் விலை உயர்ந்திருப்பது குறிப்பிடதக்கது.
தமிழ்நாட்டு பெண்கள் மட்டுமல்லாமல், மொத்தமாக பெண்கள் என்றாலே தங்கத்தின் மீது அவர்கள் வைத்திருக்கும் மோகம் அதிகம். அந்த வகையில், தற்போது தங்கத்தில் வரும் புதிய டிசைன்ஸ் கலேக்சன்ஸ் ஆண்களையும் வசிகரிக்கிறது. தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தங்கம் வர்த்தகம் அதிகமாக இருந்து வருவது குறிப்பிடதக்கது. எனவே இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை தொடங்கி 8 கிராம் தங்கத்தின் விலை கீழே காணவும்.
இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,594 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இதன் விலை 4,581 ரூபாயாக இருந்தது என்பது குறிப்பிடதக்கது. அதேபோல, நேற்று 36,648 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம், இன்று 304 ரூபாய் அதிகரித்து 36,752 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.69.30 ஆக அதிகரித்திருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.500 அதிகரித்து 69,300 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும் வீட்டிலிருந்தே படி, தங்கம் விலை அறிய வேண்டுமா, கீழே காணவும்.
வீட்டிலிருந்த படி, தங்கம் விலை அறிய; (Find out the price of gold at home)
வீட்டிலிருந்தபடியே, தங்கத்தின் விலைகளை நீங்கள் எளிதாகக் கண்டறியலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, 8955664433 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுத்தால் போதும், உங்கள் தொலைபேசியில் ஒரு செய்தி வரும், அதில் சமீபத்திய கட்டணங்களை நீங்கள் பார்த்து பயனடையலாம்.
தங்கத்தின் தூய்மையை சரிபார்க்கலாம் (Check the purity of the gold)
நீங்கள் இப்போது தங்கத்தின் தூய்மையை சரிபார்க்க விரும்பினால், இதற்காக அரசு, ஒரு செயலியை உருவாக்கியுள்ளது. அதன் பெயர் 'பிஐஎஸ் கேர் ஆப்' ஆகும். இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கத்தின் தூய்மையை சரிபார்க்கலாம். இந்த செயலி மூலம், தங்கத்தின் தூய்மையை மட்டுமல்லாமல் தங்கம் தொடர்பான புகாரையும் இதில் தெரிவிக்கலாம் என்பது குறிப்பிடதக்கது.
தற்போது, தங்கம் பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களையும் கவர்ந்து வருகிறது. ஆண்களுக்கான ஆபரணங்கள் என்ற வகையில், மோதிரம், சேயின், பிரேஸ்லேட் போன்றவற்றை வாங்க ஆண்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். திருமணம், நிச்சயதார்த்தம் என எல்லா வைபவங்களுக்கும், அவர்களும் தங்கத்தின் மூலம் ஜோலிக்க விரும்புகின்றனர்.
மேலும் படிக்க:
Share your comments