வேளாண் அறிவியல் மையங்களின் பொன்விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக "பொன்விழா ஜோதி தொடரோட்டம்” காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் வேளாண் அறிவியல் மையத்தில் (06.09.2024) முதல் (09.09.2024) வரை நடைபெறுகிறது.
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் நிதி உதவியுடன் செயல்பட்டு வரும் வேளாண் அறிவியல் மையங்கள் விவசாய உற்பத்தியை அதிகரிக்க நாடு முழுவதும் விவசாயிகள் புதிய தொழில் நுட்பங்களை கடைபிடிக்க ஆலோசனை மற்றும் பயிற்சிகள் வழங்கி வருகிறது.
பொன்விழா ஜோதி தொடரோட்டம்:
நாட்டிலேயே முதல் வேளாண் அறிவியல் மையம் பாண்டிச்சேரியில் 1974 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது பொன்விழா ஆண்டு இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், விவசாயிகளுக்கு வேளாண் அறிவியல் மையங்கள் தொடங்கப்பட்டதன் நோக்கம் செயல்பாடுகள் மற்றும் வேளாண் அறிவியல் மையத்தில் உள்ள திட்டங்கள் மற்றும் அறிவியல் மையத்தால் பயன் பெற்ற விவசாயிகளின் அனுபவங்களை பகிர்தல் போன்ற நிகழ்வுகளை மற்ற விவசாயிகளுக்கும் தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கில் பொன்விழா ஜோதி தொடரோட்டம் வேளாண் அறிவியல் மையங்களில் நடைபெற்று வருகிறது.
காந்திகிராம வேளாண் அறிவியல் மையத்தில், நேற்றைய தினம் (06.09.2024) நடைபெற்ற பொன்விழா தொடரோட்டத்தில் காந்திகிராம வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் மற்றும் முதன்மை விஞ்ஞானி (பொ.) முனைவர் S.செந்தில்குமார் வரவேற்புரை வழங்கி நிகழ்ச்சியின் நோக்கம் பற்றி எடுத்துரைத்தார்.
KVK செயல்பாடு- பாராட்டிய துணைவேந்தர்:
இந்நிகழ்ச்சிக்கு காந்திகிராம நிகர்நிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர். N.பஞ்சநதம் தலைமை வகித்து விழாப் பேருரை ஆற்றினார். தனது உரையில், ”காந்திகிராம வேளாண் அறிவியல் மையம் 1989-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் மேற்பார்வையில் இயங்கி வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தின் அனைத்து விவசாயிகளின் தொழில்நுட்ப தேவைகளை, இடுபொருட்கள் வழங்கியும், வயல்வெளி சோதனை, முதல்நிலை செயல் விளக்கங்கள், பயிற்சிகள் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.”
”திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் வேளாண் அறிவியல் மையத்தை அணுகி புதிய தொழில் நுட்பங்களை கற்றுக்கொண்டு அதனை நடைமுறைப்படுத்தி விவசாய பெருமக்கள் முன்னேற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இன்று காந்திகிராம வேளாண் அறிவியல் மையத்தின் மூலம் பயன் பெற்ற இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் தங்களது உற்பத்தி பொருட்களை கண்காட்சியில் இடம் பெற வைத்து மற்ற விவசாயிகளுக்கும் அதிகாரிகளுக்கும் விளக்கம் அளித்து தாங்கள் விவசாயத்தில் வெற்றி பெற்ற அனுபவங்களை பகிர்வதை அறிந்து எனது மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதுப்போல் நமது மாவட்டத்தில் மற்ற இளைஞர்களும் தொழில் முனைவோர்களாக உருவாக வேண்டும் என்று வேளாண் பெருமக்களை கேட்டுக்கொள்கிறேன்."
Read also: வேளாண் துறையின் சவால்கள்- TNAU சார்பில் குளோபல் நானோ கனெக்ட் மாநாடு
"சிறப்பாக செயல்படும் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு வேளாண் அறிவியல் மையம் விவசாயிகளுக்கு பாராட்டுச் சான்றுகள் வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்று வேளாண் அறிவியல் மையத்தை கேட்டுக் கொண்டார்.
காந்திகிராம பலகைக்கழகத்தின் பதிவாளர் (பொ.) முனைவர் L.ராதாகிருஷ்ணன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை இயக்குநர் முனைவர் S.மீனாட்சி மற்றும் வேளாண் மற்றும் கால்நடை அறிவியல் துறையின் முதல்வர் முனைவர் M.சுந்தரமாரி ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள். வேளாண் அறிவியல் மைய வேளாண் காடுகள் தொழில்நுட்ப வல்லுநர் P.P.சரவணன் நன்றியுரை வழங்கினார்.
கண்காட்சி மற்றும் செயல்விளக்கம்:
இந்நிகழ்ச்சியில் வேளாண் அறிவியல் மையம் மூலம் பயன்பெற்ற விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோர்கள் விவசாய பொருட்கள் மற்றும் விவசாய உற்பத்தி செய்த மண்புழு உரம், செக்கு மூலம் உற்பத்தி செய்யப்பட்ட எண்ணெய், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் காய்கறி நாற்றுகள் போன்றவற்றை கண்காட்சியில் வைத்து பல்கலைக்கழக அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் வேளாண் அறிவியல் மையத்தின் மூலம் அடைந்த பயனை எடுத்துரைத்தனர்.
வேளாண்மையில் ட்ரோன்களின் பயன்பாடு பற்றிய செயல் விளக்கமாக ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் முறையினை விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இவற்றுடன் ஊட்டச்சத்து காய்கறி தோட்டம் அமைக்கும் செயல்விளக்கமும் விவசாயிகளின் முன்னிலையில் நடைபெற்றது.
Read more:
அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன?
நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்!
Share your comments