பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2023 சீசனுக்கான கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSPs) ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயச் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையத்தின் பரிந்துரைகள் மற்றும் முக்கிய தென்னை வளரும் மாநிலங்களின் பார்வைகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டிற்கான அரைக்கும் கொப்பரையின் நியாயமான சராசரி தரத்திற்கான MSP (குறைந்தபட்ச ஆதரவு விலை) குவிண்டால் ஒன்றுக்கு ரூ.10,860/- மற்றும் பந்து கொப்பரை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 11,750/- என்பதாகும். இது அரைக்கும் கொப்பரைக்கு முந்தைய விலையை விட ரூ.270/-குவிண்டால் அதிகரித்துள்ளது மற்றும் பந்து கொப்பரை குவிண்டாலுக்கு ரூ.750/-அதிகரித்துள்ளது. இது அகில இந்திய அளவில் சராசரி உற்பத்திச் செலவைக் காட்டிலும் கொப்பரை அரைப்பதற்கு 51.82 சதவீதமும், பந்து கொப்பரைக்கு 64.26 சதவீதமும் வரம்பை உறுதி செய்யும். 2023 ஆண்டிற்கான கொப்பரையின் அறிவிக்கப்பட்ட MSP (குறைந்தபட்ச ஆதரவு விலை) ஆனது, 2018-19 பட்ஜெட்டில் அரசு அறிவித்தபடி, அகில இந்திய எடையுள்ள சராசரி உற்பத்திச் செலவை குறைந்தபட்சம் 1.5 மடங்கு என்ற அளவில் MSP (குறைந்தபட்ச ஆதரவு விலை)-யை நிர்ணயிக்கும் கொள்கைக்கு இணங்க உள்ளது.
தென்னை விவசாயிகளுக்கு சிறந்த வருமானத்தை உறுதி செய்வதற்கும் அவர்களின் நலனை கணிசமாக மேம்படுத்துவதற்கும் இது முக்கியமான மற்றும் முற்போக்கான படிகளில் ஒன்றாகும்.
இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிமிடெட் (NAFED) மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) ஆகிய இயக்கங்கள் கொப்பரை மற்றும் உமி நீக்கப்பட்ட தேங்காயை விலை ஆதரவு திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்வதற்கான மத்திய நோடல் முகமைகளாக (CNF) தொடர்ந்து செயல்படும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இயக்கங்களின் விவரங்கள்
NAFED-National Agricultural Cooperative Marketing Federation of India Ltd:
உணவு தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், நறுமணப் பொருட்கள், பருத்தி, பழங்குடியினர் விளைபொருட்கள், சணல் மற்றும் சணல் பொருட்கள், முட்டை, புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற விளைபொருட்களை நாடு முழுவதும் நிறுவப்பட்ட கூட்டுறவு வலையமைப்பின் மூலம் மண்டி அளவில் சந்தைப்படுத்தல் சங்கங்களின் தீவிர ஈடுபாட்டுடன் கொள்முதல் செய்வதன் மூலம் NAFED விவசாயிகளுக்கு உதவுகிறது.
NCCF-National Cooperative Consumers' Federation of India Limited:
இதன் முக்கிய நோக்கங்கள் நுகர்வோர் கூட்டுறவுகள் மற்றும் பிற விநியோக நிறுவனங்களுக்கு நியாயமான மற்றும் மலிவு விலையில் நுகர்வோர் பொருட்களை விநியோகிப்பதற்கு தொழில்நுட்ப வழிகாட்டுதல் மற்றும் நுகர்வோர் கூட்டுறவுகளுக்கு உதவி வழங்குதல் ஆகியவை ஆகும்.
PSS-PRICE SUPPORT SCHEME:
விவசாயப் பொருட்களுக்கான அரசின் விலைக் கொள்கையானது, அதிக முதலீடு மற்றும் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காகவும், நுகர்வோரின் நலனைப் பாதுகாக்கவும், குறைந்த விலையில் அதாவது நியாயமான விலையில் பொருட்களைக் கிடைக்கச் செய்வதன் மூலம் உற்பத்தியாளர்களுக்கும் அவர்களின் விளைபொருட்களுக்கும் லாபகரமான விலையை உறுதி செய்ய முயல்கிறது.
CNAs-CENTRAL NODAL AGENCY:
மத்திய நோடல் ஏஜென்சி என்பது, புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான ஒற்றைச் சாளர பசுமை ஆற்றல் திறந்த அணுகல் அமைப்பை அமைத்து இயக்குவதற்கு மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நோடல் ஏஜென்சி என்று பொருள்படும்.
மேலும் படிக்க:
ஜனவரி 2ம் தேதி பொங்கல் பரிசு விநியோகம்| தேங்காய்க்கு MSP உயர்வு| நுண்ணீர் பாசனம் அமைக்க மானியம்
காளான் வளர்ப்பு கூடம் அமைக்க ரூ.1லட்சம் மானியம்| கத்தரி விலை முன்னறிவிப்பு| Millet Lunch
Share your comments