1. செய்திகள்

நற்செய்தி: ஆவின் நிறுவனத்தின் தள்ளுபடி அறிவிப்பு

T. Vigneshwaran
T. Vigneshwaran
Aavin Company

ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் இனிப்பு வகைகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக விழுப்புரம் ஆவின் நிறுவன பொது மேலாளர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விழுப்புரம் ஆவின் நிறுவன பொது மேலாளர் ரமேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒவ்வொரு வருடமும் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையின்போது உயர்தர ஆவின் நெய்யில் செய்யப்பட்ட இன்சுவை மிகுந்த இனிப்பு வகைகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதுபோல் இந்த ஆண்டும் ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லட்டு, பாதுஷா, மினி ஜாங்கிரி, டிரைஜாமுன், பாதாம் அல்வா, மில்க் கேக் போன்ற இனிப்பு வகைகள் விற்பனை தொடங்கியுள்ளது. இந்த இனிப்பு வகைகள் ஆவின் பாலகங்கள், சில்லரை, மொத்த விற்பனையாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசு நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், வங்கிகள், தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள், சர்க்கரை ஆலைகள் போன்ற பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தள்ளுபடி விலையில் ஆவின் இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்பட உள்ளது.

கட்டணமில்லா தொலைபேசி எண்:

லட்டு, பாதுஷா ஆகியவை 250 கிராம் ரூ.150-க்கும், மைசூர்பா 250 கிராம் ரூ.140-க்கும், டிரைஜாமுன் 250 கிராம் ரூ.160-க்கும், மில்க்கேக் 250 கிராம் ரூ.120-க்கும், பால்கோவா 250 கிராம் ரூ.130-க்கும், பாதாம்அல்வா 250 கிராம் ரூ.200-க்கும், மினிஜாங்கிரி 250 கிராம் ரூ.140-க்கும், குலோப்ஜாமுன் 100 கிராம் ரூ.45-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் மொத்தமாகவும், சில்லரையாகவும் இனிப்பு வகைகளை பெறுவதற்கு 18004253271 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

விழுப்புரம் ஆவின் நிறுவனம் இந்த ஆண்டு இனிப்புகளை 35 டன் அளவிற்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இலக்கு சென்ற ஆண்டை விட இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் விழுப்புரம் ஆவின் நிறுவனம் பல்வேறு உத்திகளை கையாண்டு பால் விற்பனையை சென்ற ஆண்டை விட 3 மடங்காக உயர்த்தியுள்ளது. பால் உபபொருட்கள் விற்பனை சென்ற ஆண்டை விட சுமார் 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் பால் பணப்பட்டுவாடா நிலுவை 60 நாட்களாக இருந்தது. தற்போது 25 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

தேனியில் 30ம் தேதி விவசாயிகள் குறைதீர் முகாம்

English Summary: Good news: Aavin company's discount announcement Published on: 27 September 2022, 07:17 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.
News Hub