உள்நாட்டு மீனவா்கள் பயன்பெறும் வகையில் மீன்பிடி வலைகள் மற்றும் கண்ணாடி நாரிழையிலான பரிசல்கள்களை மானிய விலையில் கடந்த சில ஆண்டுகளாக வழங்கி வருகிறது. நிகழாண்டிற்கான மானிய விவரங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. (2019-20) ஆம் ஆண்டிற்கான மீன்பிடி வலைகள் மற்றும் கண்ணாடி நாரிழையிலான பரிசல்கள் வாங்க 40% மானியம் வழங்கப்பட உள்ளது. பயன் பெற விரும்புவோர் தருமபுரி மீன்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம் என கூறப்பட்டுள்ளது.
மானியம் பெற தகுதியானவர்கள்
- உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினா்களாகவும், முழுநேரம் மீன்பிடிப்பு தொழில் ஈடுபட்டவராகவும் இருக்க வேண்டும். அதே போன்று பங்கு முறையில் மீன் பிடிக்கும் மீனவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- கடந்த ஆண்டுகளில் மீன்பிடி வலைகள் அல்லது பரிசல்களுக்காக அரசின் எவ்வித மானியத் தொகை பெற்றிருக்கக் கூடாது. மேலும் பயனாளிகளின் சொத்து உருவாக்கம் எல்லாம் ஆய்வு செய்யப்பட்ட பிறகு, மானியத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
- குடும்ப அட்டைகளில் உள்ள உறுப்பினர்களில் ஒருவருக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும்.
- பயனாளிகளுக்கு 20 கிலோ எடையுள்ள நைலான் மீன்பிடி வலைகள் வாங்குவதற்கு அதிகபட்சமாக 40% அதாவது ரூ.8,000 வழங்கப்படும். பரிசல்கள் வாங்குவதற்கும் மானியம் வழங்கப் படும்.
- பழங்குடியினம் மாற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினத்தை சேர்ந்த மீனவ பயனாளிகளுக்கு 24% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தகுதியும், விரும்பமும் உள்ள உள்நாட்டு மீனவா்கள் ஒரு வாரத்திற்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியை தொடா்புகொள்ளலாம்.
தருமபுரி மீன்துறை உதவி இயக்குநா் அலுவலகம்,
ராமசாமி தெரு,
ஒட்டப்பட்டி,
தருமபுரி-636 705
04342-232311
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments