ஹோலிக்கு முன்னதாக ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த மாதம் அனைத்து அட்டைதாரர்களுக்கும் மீண்டும் ஒருமுறை ரேஷன் வழங்கப்படும். மேலும் இந்த ரேஷன் விநியோகம் பிப்ரவரி 20 முதல் தொடங்கி பிப்ரவரி 28 வரை நடைபெறும். இதனுடன், NFSA இன் கீழ் இந்த ஆண்டு முழுவதும் அட்டைதாரர்களுக்கு இலவச ரேஷன் விநியோகமும் மீண்டும் வழங்கப்படும்.
ஏழை மக்களின் நிதிச் சுமையைக் குறைக்க, NFSA-ன் கீழ் ஆண்டு முழுவதும் இலவச ரேஷன் பொருள் விநியோகத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையில் உத்தரபிரதேச மாநிலத்தில் ரேஷன் விநியோகம் தாமதமாக நடக்கிறது.
அதாவது டிசம்பர் மாத ரேஷன் ஜனவரியிலும், ஜனவரி மாத ரேஷன் பிப்ரவரி மாதத்திலும் வழங்கப்பட்டது. அந்த வகையில் தற்போது பிப்ரவரி மாதத்துக்கான இலவச ரேஷன் பொருட்களை பிப்ரவரி மாதமே வழங்க உத்தரபிரதேச அரசு மிகப்பெரிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் விநியோகம் 20ஆம் தேதி முதல் தொடங்கும் என்று டிஎஸ்ஓ சுனில் குமார் சிங் தெரிவித்து இருந்தார். மேலும் இதன் கீழ், அந்தியோதயா அட்டைதாரர்களுக்கு 35 கிலோ (14 கிலோ கோதுமை மற்றும் 21 கிலோ அரிசி) இலவசமாகவும், தகுதியுள்ள வீட்டு அட்டைதாரர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ஐந்து கிலோ (இரண்டு கிலோ கோதுமை மற்றும் மூன்று கிலோ அரிசி) வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே தற்போது அடுத்த மார்ச் மாதத்தில், கார்டுதாரர்களுக்கு மார்ச் மாத ரேஷன் மட்டுமே கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க:
Share your comments