ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ள , 'உத்தரவாத பென்சன் திட்டத்தின் (Guaranteed Pension Scheme) முன்மொழிவுகளை மத்திய அரசு தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக ஆங்கில நாளிதழான தி இந்தியன் எஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர வேண்டும் என்ற அரசுப் பணியாளர்கள்/ சங்கங்களின் கோரிக்கை ஓரளவுக்கு நிறைவேறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: பெண்களுக்கான அசத்தல் திட்டம் வீட்டியிலிருந்த படி பெண்கள் 7.5% வட்டி பெறலாம்.
உத்தரவாத பென்சன் (Guaranteed Pension)
கடந்த 2001-ம் ஆண்டு ஓய்வூதியச் செலவீனங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மத்திய அரசு உயர்மட்ட வல்லுனர் குழுவை அமைத்தது. இந்த குழு, பங்களிப்பு பென்சன் திட்டத்தை (Contribution based Pension Scheme) பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை, இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழ்நாடு 2002-03-ம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில், ஆந்திர முதலமைச்சரால் முன்மொழியப்பட்டுள்ள 'உத்தரவாத ஓய்வூதியத் திட்டம்’ (Guaranteed Pension Scheme) பல்வேறு தரப்பினரின் கவனத்தையும் பெற்று வருகிறது. திட்டத்தின் கீழ், பணியாளர்களின் ஊதியத்தில் 30% ஓய்வூதியமாக பெற வேண்டுமென்றால், பணியாளர்கள் ஊதியத்தில் இருந்து 10% அளவு செலுத்த வேண்டும். அதேபோன்று, ஊதியத்தில் 40% ஓய்வூதியமாக பெற வேண்டுமென்றால், பணியாளர்கள் தங்களது ஊதியத்தில் இருந்து 14% அளவு செலுத்த வேண்டும். அரசு அதற்குச் சமமான அளவு பங்குத் தொகையினை செலுத்தும்.
மேலும் படிக்க: ரூ.20000 பயிர்களுக்கு இழப்பீடு|PM Kisan அப்டேட்| உளுந்து விவசாயிகளுக்கு 50% மானியத்தில் விதை வழங்கல்
இதன் மூலம், சந்தை அபாயங்கள் கடந்து, சரியான அளவில் ஓய்வூதியத் தொகை வழங்கப்படும் என்று அம்மாநில அரசு நம்புகிறது. அதேபோல பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள வரையறுக்கப்பட்ட அம்சத்தையும், புதிய திட்டத்தில் உள்ள பங்களிப்பு அம்சத்தையும் இந்த திட்டம் இணைப்பதால அரசு ஊழியர்களுக்கு அதிக நன்மை கிடைக்கும் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க
முதியோர் உதவித்தொகையில் புதிய நடைமுறை: இனி இவர்களுக்கும் பணம் கிடைக்கும்!
தமிழ்நாட்டில் பழைய பென்சன் திட்டம் வருமா? சென்னையில் நடக்கப் போகும் மாநாடு!
Share your comments