2003ஆம் ஆண்டு வரை அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. 2004ஆம் ஆண்டு முதல் தேசிய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டது. எனினும், தேசிய பென்சன் திட்டத்துக்கு அரசு ஊழியர்கல் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பழைய ஓய்வூதிய திட்டம் (Old Pension Scheme)
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கெனவே ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஜார்கண்ட் மாநில அரசும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்திருந்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஜார்கண்ட் அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துவிட்டது. எனினும், தேதி அறிவிக்கப்படாததால் எப்போது பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என அரசு ஊழியர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு பென்சன் திட்டம் அகற்றப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கு தேவையான வழிகாட்டு நெறிமுறைகளையும் தயார் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது என ஜார்கண்ட் அமைச்சரவை செயலாளர் வந்தனா தாதெல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில்?
தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனினும், இதுகுறித்து அரசு இன்னும் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவதில் சட்ட சிக்கல்கள் இருப்பதாகவும், முதல்வர் அறிவுறுத்தலின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
EPFO பென்சன் வாங்க என்ன செய்ய வேண்டும்: அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!
Share your comments