மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மாறிவிட்டன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் போக்கு அமலில் இருந்தது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்றாவாறு பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயிக்கப்பட்டது.
இந்த போக்கு சுமார் 15 ஆண்டுகளாக அமலில் இருந்து வந்தது. இதையடுத்து தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் போக்கு அமலுக்கு வந்தது. இதன் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களின் கையில் வழங்கப்பட்டது.
இதில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றங்களை கண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் பெரும்பாலும் மக்கள் சிரமத்திற்கு நேரிடுகிறது. பெட்ரோல் டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் ஏற்பட்டு அதிரடியாக ஏற்றம் கண்டுவருவதை பார்க்க முடிகிறது.
கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக மாறி வருகிறது. அதிகரிக்கும் விலையால் பிற பொருள்களின் விலைவாசியும் உயரும் நிலைமை உருவாகியுள்ளது.
இந்நிலையில் சென்னையில் இன்றைய விலை நிலவரத்தை அறிந்துக் கொள்ளலாம். அதாவது பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து மாறாமல் லிட்டருக்கு ரூ.98.96 ஆக விற்பனையில் உள்ளது.
ஆனால் டீசல் விலை நேற்றைய விலையிலிருந்து 24 காசுகள் உயர்ந்துள்ளது. தற்போது டீசலின் விலை ரூ.93.93 என்று விற்கப்படுகிறது. இன்று காலை 6 மணி முதல் இந்த விலை அமலுக்கு வந்துள்ளது.
மேலும் படிக்க:
வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று பாரத்பந்த்- விவசாய சங்கங்கள் ஏற்பாடு!
சம்பா பருவ பயிர்களுக்கு காப்பீடு: விவசாயிகளுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்!
Share your comments