1. செய்திகள்

0.25 ஏக்கர் நிலத்தை வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. 50 சதவீதம் மானியம் + கருவி.. விவசாயிகள் ஹேப்பி

Harishanker R P
Harishanker R P

விவசாயிகளின் நலனுக்காக தமிழக அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பம்பு செட் குறித்த அறிவிப்புகள் விவசாயிகள் மத்தியில் அதிகம் கவனிக்கப்படுகின்றன.. காரணம், பழைய மின் மோட்டார்களை பயன்படுத்தும் போது குறைவான தண்ணீர் பாசனத்துடன் மின் நுகர்வும் அதிகமாகி விடுவதால் மின் மோட்டார்களை மாற்றுவதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில், சென்னை விவசாயிகளுக்கு ஒரு மகிழ்ச்சி அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.


தமிழகத்தின் விவசாயிகளை பொறுத்தவரை, குறைந்த மின்மோட்டார் பம்பு செட்டுகளை தொடர்ச்சியாக பயன்படுத்தி வருகிறார்கள். இதனால், மின் நுகர்வு அதிகம் எகிறுகிறது.. இதைத்தவிர, பயிருக்கு நீர் பாய்ச்சும் நேரமும் மிச்சமாகி, மின்மாற்றியும் அதிக சுமை ஏற்பட்டு பழுதாகிவிடுகிறது.

இதுபோன்ற இடர்பாடுகளை தீர்ப்பதற்காகவே புதிய கிணறுகளை உருவாக்கும் விவசாயிகளுக்கும், திறன் குறைந்த பழைய மின் மோட்டார் பம்பு செட்டுகளை மாற்ற விரும்பும் சிறு, குறு விவசாயிகளுக்கும் புதியதாக மோட்டார் பம்புசெட் வாங்குவதற்கான மானிய உதவியையும், அரசே கொடுத்து உதவுகிறது. மின்சார பயன்பாடுகள் மின்சார பயன்பாட்டு திறனை அதிகரித்தல், குறைந்த செலவில் அதிகமான பாசன நீர் இரைத்தல் போன்றவையே இத்திட்டத்தின் பிரதானமாக குறிக்கோளாக உள்ளது.. இந்த மானிய திட்டத்தில், விவசாயிகள் தங்களது பழைய பம்புசெட்டுகளை மாற்றி, புதிதாக புதிய மின் மோட்டார் பம்புசெட்டை அமைத்து கொள்ள முடியும். அந்தவகையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிணற்றுக்கு புதிய மின் மோட்டார் பம்புசெட் வாங்குவதற்கு, குறைந்தபட்சம் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் மானியம் வழங்கப்படுகின்றன. மொத்த தொகையில் 50 சதவீதம் அல்லது ரூ.15,000/- இவற்றில் எது குறைவோ அந்த தொகையே பின்னேற்பு மானியமாக தரப்படுகிறது..

முன்னுரிமை - பம்ப்செட் ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவினை சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை தரப்படுவதால், 1000 எண்கள் பம்பு செட்டுகள் அவர்களுக்கென இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பலன்பெற வேண்டுமானால், விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை, சிறு, குறு விவசாயிக்கான சான்றிதழ், போட்டோ, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம், ஆதி திராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவராயிருப்பின் சாதிச் சான்றிதழ், சிட்டா, கிணறு விவரத்துடன் கூடிய அடங்கல், மின் இணைப்பு (Service Connection) சான்றிதழ், புதிய மின்மோட்டார் வாங்குவதற்கான உத்தேச விலைப்பட்டியல்/ விலைப்புள்ளி போன்ற ஆவணங்கள் இருக்க வேண்டும். புல் அறுக்கும் கருவிகள் இந்நிலையில், சிறு, குறு விவசாயிகளுக்கு, 50 சதவீத மானியத்தில், மின்சாரத்தில் இயங்கும் தீவன புல் நறுக்கும் கருவிகள் வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளதாவது:

"மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ், கால்நடைகளுக்கு தீவனம் மற்றும் அதற்கான உபகரணங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நடப்பாண்டு மாநிலம் முழுவதும் உள்ள 3,000 சிறு, குறு விவசாயிகளுக்கு, 50 சதவீத மானியத்தில், மின்சாரத்தில் இயங்கும் தீவன புல் நறுக்கும் கருவிகள் வழங்கப்பட உள்ளன. 0.25 ஏக்கர் தீவன சாகுபடி இச்சலுகையை பெற, சிறு, குறு விவசாயிகளாக இருக்க வேண்டும். இரண்டு பெரிய கால்நடைகள் வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம், 0.25 ஏக்கர் தீவன சாகுபடி நிலத்தோடு, மின் வசதியை பெற்றிருக்க வேண்டும். தீவன புல் நறுக்கும் கருவி ஒன்றின் விலை, 32,000 ரூபாய். இதில், 16,000 ரூபாய் மானியமாக வழங்கப்படும். தீவன புல் நறுக்கும் கருவிக்கான விலையில், 50 சதவீத பணம் செலுத்த தயாராக இருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தில் உள்ள உதவி மருத்துவரை அணுகவும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

English Summary: Good news for small scale farmers

Like this article?

Hey! I am Harishanker R P. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.