1. செய்திகள்

தமிழக கால்நடை விவசாயி- பால் உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Tamilnadu ministers

பால்வளத்துறை சார்பில் ரூ.12 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கால்நடை தீவனம் மற்றும் மூலப்பொருட்கள் சேமிப்புக் கிடங்கு, பால் உற்பத்தியாளர் ஒன்றிய அலுவலகக் கட்டடம், பால் பவுடர் சேமிக்கும் கிடங்கு, பயிற்சி நிலையம், மகளிர் விடுதி, நூலகம், ஆய்வுக் கூடம் மற்றும் திருப்பூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

ஈரோட்டில் கால்நடை தீவன சேமிப்புக் கிடங்கு: ஈரோடு மாவட்டத்தில் தீவன உற்பத்தி திறன் தற்போது நாளொன்றுக்கு 150 மெட்ரிக் டன்னிலிருந்து 300 மெட்ரிக் டன்னாக தரம் உயர்த்தப்பட்டு, கால்நடை தீவனம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

எனவே அதிகரித்துள்ள உற்பத்திக்கான மூலப்பொருள் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட தீவனத்தினை சேமித்து வைப்பதற்காகவும், தரமான கால்நடை தீவனத்தை வழங்கி பால் உற்பத்தியை அதிகரிக்கவும், 2 கோடியே 14 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்கு இன்று திறக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட பால் உற்பத்தி கூட்டுறவு ஒன்றிய பயிற்சி நிலையம்:

திருநெல்வேலி மாவட்ட பால் உற்பத்தி கூட்டுறவு ஒன்றியத்தில் 1996-ம் ஆம் ஆண்டு முதல் பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இக்கட்டடம் பழுதடைந்து பயனற்ற நிலையில் உள்ளதால் பால் உற்பத்தியாளர்களுக்கு பயிற்சி அளிக்க இயலாத நிலை இருந்து வருகிறது. மகளிர் பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி நிதியுதவி திட்டத்தின் கீழ்,1 கோடியே 21 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மகளிருக்கான நூலகம். ஆய்வகம், விடுதி வசதியுடன் கூடிய பயிற்சி நிலையக் கட்டடம் இன்று திறக்கப்பட்டது.

தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகக் கட்டடம்:

தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் ஆகஸ்ட் 2019 அன்று முதல் கிருஷ்ணகிரி ஒன்றியத்திலிருந்து தனியாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது தனியே அலுவலகக் கட்டடம் இல்லாததால் குளிரூட்டும் நிலைய வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. எனவே, தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திற்கு தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி நிதியுதவியின் கீழ் தருமபுரியில் 2 கோடியே 72 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அலுவலகம் மற்றும் பால் கொள்முதல் பிரிவு கட்டடம் இன்று திறக்கப்பட்டது.

திருவண்ணாமலை பால் பவுடர் ஆலையில் சேமிப்புக் கிடங்கு:

திருவண்ணாமலை பால் பவுடர் ஆலையில் நாளொன்றுக்கு 20 மெட்ரிக் டன் பால் பவுடர் உற்பத்தி திறனில் மாவட்ட ஒன்றியங்களின் உபரிப் பாலை உருமாற்றம் செய்து சேமித்து வைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. தற்போது 1500 மெட்ரிக் டன் கிடங்கு உள்ளது. அதிக உற்பத்தி காலத்தில் கிடங்கின் கொள்ளளவு போக மாவட்ட ஒன்றியங்கள் தங்களின் பால் பவுடரை தனியார் மற்றும் இதர சேமிப்புக் கிடங்குகளில் வாடகைக்கு வைத்துள்ளதால் கூடுதல் செலவீனம் ஏற்பட்டு வருகிறது.

இதனை தவிர்க்கும் பொருட்டு, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையத்தின் நிதியின் மூலம் 2 கோடியே 93 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 1500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட பால் பவுடர் சேமிப்பு கிடங்கு இன்று திறக்கப்பட்டது.

விவசாயிகளுக்கு குட் நியூஸ்- பிஎம் கிசான் பணம் வரவு தேதி அறிவிப்பு

திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகக் கட்டடம்

திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் டிசம்பர் 2018 அன்று முதல் ஈரோடு ஒன்றியத்திலிருந்து தனியாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது தனியே அலுவலகக் கட்டடம் இல்லாததால் குளிரூட்டும் நிலைய வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. எனவே தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் 3 கோடி ரூபாய் செலவில் திருப்பூரில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடம் இன்று திறக்கப்பட்டது.

சென்னையிலுள்ள தலைமைச் செயலகத்தில் நடைப்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் பெருமக்கள் எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன், மனோ தங்கராஜ், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உட்பட அரசுத்துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

மேலும் காண்க:

உறைபனிக்காலத்தில் துளசி செடியை பாதுக்காக்க சூப்பர் டிப்ஸ்

6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- டெல்டா பகுதியை நெருங்கும் கனமழை

English Summary: Good news for Tamilnadu cattle farmer and milk producers Published on: 14 November 2023, 03:42 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.