சொந்த ஊர்களுக்குச் செல்வோரும் வெகு தூரம் பயணிப்போரும், சுற்றுலா செல்பவர்களும் பெரும்பாலும் ரயில்களில் தான் அதிகமாகப் பயணிக்கின்றனர். பேருந்து, விமானங்களை விட ரயில்களில் கட்டணம் மிகவும் குறைவு. மிக வேகமாகவும் பயணிக்க முடியும். ரயில்களில் கழிப்பறை, மின் விசிறி, ஏசி, உணவு, சிற்றுண்டி போன்ற நிறைய வசதிகளும் உள்ளன. இதனால் நிறையப் பேர் ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றனர்.
ரயில் பயணம் (Train Travel)
ரயிலில் பயணம் செய்வதற்கு முன்பாக ரயில்வே வாரியம் செய்துள்ள மாற்றங்களை தெரிந்து கொள்ள வேண்டும். டிக்கெட் புக்கிங் தொடர்பான விதிமுறைகள், ரயில்களின் ஓட்டம், ரத்தான ரயில்கள், தாமதமாக வரும் ரயில்கள், டிக்கெட் கட்டணம், அபராதம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பயணிகள் அப்டேட்டுடன் இருப்பது நல்லது. எனவே நீங்கள் எங்காவது ரயிலில் பயணம் செய்யப் போகிறீர்கள் என்றால், வீட்டை விட்டு கிளம்பும் முன் இதைப் பற்றி கட்டாயம் தெரிந்துகொள்வது அவசியம்.
பனிமூட்டக் காலங்களில் இந்திய ரயில்வே சேவையில் கால தாமதத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. நம்நாட்டின் வடக்குப் பகுதிகளில், ஏற்படும் பனிமூட்டங்களிலிருந்து ரயில் பயண சேவையை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக விபத்து ஏற்படுவதைத் தடுப்பது மற்றும் ரயில் சேவையின் கால தாமதத்தைக் குறைப்பது போன்றவற்றில் தனிக் கவனம் செலுத்தப்படும்.
பனி மூட்டத்தை நீக்கும் கருவிகள்
ரயில் இஞ்சின்களில் பனி மூட்டத்தை நீக்கும் கருவிகள் பொருத்தப்படுவது, அதிக ஒலி எழுப்பக்கூடிய கருவிகளை பொருத்துதல், தண்டவாளங்களுக்கு அருகில், வெள்ளைநிற கோடுகள் இடுவது, லெவல் கிராசிங் பகுதிகளில் விசில் சப்தத்தை எழுப்பக் கூடிய கருவிகள் மற்றும் எல்இடி பல்புகளை பொருத்துதல், பிரதிபலிக்கக் கூடிய சிக்மா வடிவிலான சிக்னல் அமைப்பது, 60 கிலோ மீட்டரிலிருந்து 75 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே ரயிலை இயக்குவது போன்ற முக்கிய நடவடிகைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுதவிர வேறு வகையில் ரயில் பயணத்தை எளிதாக்கும் நடவடிக்கைகள் தேவைப்பட்டாலும் அவற்றையும் செய்து முடிக்க ரயில்வே நிர்வாகம் தயாராக உள்ளது.
குளிர் காலங்களில் ரயில் பயணிகள் நீண்ட தூரம் ரயில் பயணம் செய்யும் போது சந்திக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் இந்த நடவடிக்கைகளை ரயில்வே வாரியம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் வழக்கமான ரயில் பயணிகளின் வருகை இருக்கும் என்பதோடு, ரயில் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. இந்த நடவடிக்கைகள் பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பனிமூட்ட காலங்களில் ரயில் பயணம் செய்யலாமா வேண்டாமா என்று குழம்பிக் கொண்டிருந்தவர்களுக்கு இப்போது ஒரு தீர்வு கிடைத்துள்ளது.
மேலும் படிக்க
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்: ஓலை, கூரை வீடுகள் கணக்கெடுப்பு!
1000 ரூபாய் முதலீடு போதும்: ஒரே ஆண்டில் 50% லாபம் கிடைக்கும்!
Share your comments