1. செய்திகள்

நல்லெண்ணெய் விலை கிடு கிடு ஏற்றம் - ஒரே வாரத்தில் ரூ.166 உயர்வு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Good oil prices rise sharply by Rs 166 in one week

தமிழகத்தில் 15 கிலோ நல்லெண்ணெய் விலை ஒரே வாரத்தில் ரூ.166 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இல்லத்தரசிகள் வேதனை அடைந்துள்ளனர். ஏனெனில் இந்த விலைஉயர்வு, மக்கள் எதிர்பார்க்காத ஒன்று என்பதுதான் உண்மை.

ரூ.166

விருதுநகர் மார்க்கெட்டில் வாரந்தோறும் உணவுப் பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விலைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் ரூ.4702க்கு (15 கிலோ) விற்பனை செய்யப்பட்ட நல்லெண்ணெய் ஒரே வாரத்தில் ரூ.166 வரை உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது அதன் விலை ரூ.4868 ஆக இருக்கிறது.

விலை உயர்வு

அதேபோல, குண்டூர் வத்தல் (100 கிலோ) கடந்த வாரம் அதிகபட்சமாக ரூ.21000 வரை விற்கப்பட்டது. இந்த வாரம் அதன் விலை ரூ.500 உயர்த்தப்பட்டு ரூ.21500க்கு வந்துள்ளது. அதோடு, நயம் துவரம் பருப்பு (10 கிலோ) கடந்த வாரம் ரூ.8900க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது மூட்டை ஒன்றுக்கு ரூ.200 உயர்த்தப்பட்டு ரூ.9100க்கு விற்பனையாகிறது.
பாசிப்பயறு கடந்த வாரம் ரூ.8600க்கு விற்பனையான நிலையில், இந்த வாரம் ரூ.200 உயர்த்தப்பட்டு ரூ.8800க்கு விற்கப்படுகிறது.

அதிகரிக்கும் ஆபத்து

பருப்பு வகைகள், வத்தல் மற்றும் எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் தின்பண்டங்கள் மற்றும் எண்ணெய் பலகாரங்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

மேலும் படிக்க...

45 ஆண்டுகளாக உணவருந்தா விவசாயி- உயிர்வாழும் அதிசயம்!!

பிளாஸ்டிக் தண்ணீர்- ஆய்வில் தகவல்!

English Summary: Good oil prices rise sharply by Rs 166 in one week Published on: 21 June 2022, 11:07 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.