ஈரோடு மாவட்டம் சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மொத்தம் 1636 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 63 ரூபாய் 29 காசுக்கும், அதிகபட்ச விலையாக 72 ரூபாய் 30 காசுக்கும், சராசரி விலையாக 68 ரூபாய் 69 காசுக்கும் ஏலம் போனது.
நிலக்கடலை ஏலம் (Groundnut Auction)
மொத்தம் 52,734 கிலோ எடையுள்ள நிலக்கடலை 35 லட்சத்து 68 ஆயிரத்து 576 ரூபாய்க்கு விற்பனையானது. சென்ற வாரத்தைப் போல இந்த முறையும் அதிக விலைக்கு நிலக்கடலை ஏலம் நடைபெற்றுள்ளதால் விவசாயிகளும் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதேபோல கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 1129 நிலக்கடலை மூட்டைகள் விற்பனைக்கு வந்தன. அதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 58 ரூபாய் 30 காசுக்கும், அதிகபட்ச விலையாக 70 ரூபாய் 89 காசுக்கும், சராசரி விலையாக 64 ரூபாய் 80 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 36,619 கிலோ எடையுள்ள நிலக்கடலை 23 லட்சத்து 30 ஆயிரத்து 872 ரூபாய்க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
நிலக்கடலை நல்ல விலைக்கு விற்பனை ஆனதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், வரும் நாட்களிலும் இதுபோல் ஏலம் போனால், விவசாயிகளுக்கு நல்ல இலாபம் கிடைக்கும்.
மேலும் படிக்க
Share your comments