Cannabis cultivation
விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதற்காக கஞ்சா விவசாயத்தை அனுமதிக்க இமாசல பிரதேச அரசு பரிசீலித்து வருகிறது. இமாசல பிரதேசத்தில் விவசாயிகள் ஆப்பிள் உற்பத்தியை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். ஆனால் அண்மைக்காலமாக மோசமான வானிலை, குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படும் மலிவு ஆப்பிள்கள் போன்றவற்றால் இமாசல பிரதேச விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இமாசல பிரதேச அரசும் நிறைய கடன் சுமையில் சிக்கியுள்ளது. இந்நிலையில், விவசாயிகளின் வருவாயை பெருக்குவதற்காக கஞ்ச விவசாயத்தை அனுமதிக்க இமாசல பிரதேச அரசு பரிசீலித்து வருகிறது.
கஞ்சா விவசாயம் (Cannabis cultivation)
மருத்துவ பயன்பாட்டுக்காக மட்டுமே கஞ்சா உற்பத்தி செய்ய பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே இமாசல பிரதேச விவசாயிகளும் கஞ்சா விவசாயத்துக்கு அனுமதி அளிக்கும்படி மாநில அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கஞ்சா விவசாயத்தால் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கசகசா உற்பத்தி
கஞ்சா மட்டுமல்லாமல் கசகசாவில் இருந்து எடுக்கப்படும் அபினுக்கும் அதிக டிமாண்ட் உள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தராகண்ட் போன்ற மாநிலங்களில் ஏற்கெனவே கசகசா உற்பத்திக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, கட்டுப்பாடுகளுடன் கூடிய கஞ்சா உற்பத்தியாலும், கசகசா பயிராலும் விவசாயிகள் வருமானம் ஈட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில், மோசமான வானிலையால் ஆப்பிள் பயிர்கள் நாசமாவது மட்டுமல்லாமல், மலிவு விலையில் இறக்குமதியாகும் ஆப்பிள்களால் ஆப்பிள் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் சட்டவிரோதமாக கஞ்சா வளர்க்கப்படுவதையும் தடுக்க முடியும் என அரசு தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க
அனைத்து விவசாயிகளுக்கும் பிஎம் கிசான் திட்டம்: மத்திய விவசாய அமைச்சர் வேண்டுகோள்!
ரேஷன் கடைகளில் இனி புதிய வசதி: ஆன்லைன் பணப் பரிவர்த்தனை முறை அமல்!
Share your comments