புதுச்சேரி மாநிலத்தில், கடந்த மாதம் பெய்த தொடர் கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது, இது அப்பகுதி மக்களுக்கு பெரும் அளவு பாதிப்பை ஏற்படுத்தியது. புதுச்சேரி, உழவர்கரை, காரைக்கால், இந்திரா காந்தி சதுக்கம், உருளையான்பேட்டை, ராஜ்பவன் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் பெரும் சிக்கல்களை எதிர்க்கொண்டனர்.
பருவ நிலை மாற்றம் காரணமாக சென்னை, காரைக்கால், மற்றும் தென் மாவட்டங்கள் மட்டுமின்றி, மேலும் பல பகுதிகளில் மழை நீரால் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பீதி இருந்தனர். இந்த மழையினால் குறுவை பயிர்காலத்தை முன்னிட்டு பயிரடப்பட்ட அனைத்து பயிர்களும் வீணாகின. இது விவசாயத்தை மட்டும் நம்பி இருக்கும் குடும்பங்களை பேரளவில் பாதித்தது. விவசாயம் மட்டுமின்றி, அலுவலகம் செல்லும் மக்களும் பெரும் சிக்கலுக்கு அளாகியிருந்தனர். பள்ளி, கல்லூரி விடுமுறையால் இவ்வருடமும் மாணவர்களின் கல்வியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
வரலாறு காணாத மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி மிதந்தன. இதனை கடந்த மாதம் மத்திய குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு மழை நிவாரணமாக மஞ்சள் மற்றும் சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 5000 ரூபாயும், வறுமை கோட்டிற்கு மேல் உள்ள மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 4,500 ரூபாயும், விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு தலா 20,000 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தார்.
அதன்படி, குடும்ப அட்டைதார்களுக்கு மழை நிவாரணம் வழங்கும் பணியை சட்டப்பேரவை வளாகத்தில் முதல் அமைச்சர் ரங்கசாமி இன்று தொடங்கியும் வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் ரங்கசாமி, பொங்கல் பண்டிகைக்கான இலவச பொருட்கள், அரசு நிறுவனமான அமுதசுரபி மூலம் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்தார். மேலும், கொரோனா காலத்தில், புதுச்சேரி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டம், தீவிரமான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நடத்தப்படும் எனக் கூறினார். எனவே மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க:
Share your comments