1. செய்திகள்

Krishi-DSS | எப்போ விதைக்கனும் எப்போ அறுவடை செய்யனும்? இனி செயற்கைக்கோள் சொல்லும்!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Krishi-DSS
புவியியல் தளமான க்ரிஷி-டிசிஷன் சப்போர்ட் சிஸ்டம் (கிருஷி-டிஎஸ்எஸ்) வெளியீடு!

வேளாண்மைத் துறை இணை அமைச்சர் பகீரத் சவுத்ரி, புவியியல் தளமான க்ரிஷி-டிசிஷன் சப்போர்ட் சிஸ்டத்தை (Krishi-DSS)  வெளியிட்டார். இதன் மூலம் விளைச்சல் செய்வது அனைத்தும் செயற்கைகோள்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளன.

பயிர் மேலாண்மை மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான முக்கியமான தரவுகளை விவசாயிகளுக்கு வழங்குவதற்காக செயற்கைக்கோள் அடிப்படையிலான க்ரிஷி-டிசிஷன் சப்போர்ட் சிஸ்டத்தை அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது.

க்ரிஷி-டிசிஷன் சப்போர்ட் சிஸ்டம் 

வேளாண் துறை இணை அமைச்சர் பகீரத் சௌத்ரி, க்ரிஷி-டிசிஷன் சப்போர்ட் சிஸ்டத்தை (கிரிஷி-டிஎஸ்எஸ்) வெளியிட்டார், இது பயிர் நிலைமைகள், வானிலை முறைகள், நீர் வளங்கள் மற்றும் மண் ஆரோக்கியம் பற்றிய நிகழ்நேர தகவல்களை வழங்கும் புவியியல் தளமாகும். விழாவில் பேசிய அமைச்சர், "வளர்ந்து வரும் காலநிலை சவால்களுக்கு மத்தியில் இந்த தளம் விவசாயிகளுக்கு ஒரு புதிய மைல்கல்" என்று பகீரத் சவுத்ரி தெரிவித்தார். 

பேரழிவுகள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை

அரசாங்கத்தின் 'கதி சக்தி- Gati Shakti' முன்முயற்சியைப் போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட க்ரிஷி-டிஎஸ்எஸ் (Krishi-DSS), பூச்சித் தாக்குதல்கள் மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகள் போன்ற சாத்தியமான பேரழிவுகள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கைகளை வழங்க செயற்கைக்கோள் உதவியாக இருக்கும்

பயிர் விளைச்சல், கண்காணித்தல் மற்றும் பயிர் சுழற்சி மற்றும் பல்வகைப்படுத்தலை ஊக்குவிப்பதில் இந்த அமைப்பு பேருதவியாக இருக்கும். இது பிராந்தியங்கள் முழுவதும் பயிர் முறைகள் பற்றிய தரவை வழங்கும் மற்றும் பல்வேறு வளர்ச்சி நிலைகளில் பயிர் நிலைமைகளை வானிலிருந்தே கண்காணிக்கும்.

வேளாண் செயலர் தேவேஷ் சதுர்வேதி பேசுகையில், விவசாயத்தில் விண்வெளி தொழில்நுட்பத்தின் நன்மைகளை வலியுறுத்தினார் மேலும் அதிக பயிர் வகைகளில் ரிமோட் சென்சிங்கை விரிவுபடுத்துமாறு நவீன விவசாயிகளை கேட்டுக்கொண்டா்.

இஸ்ரோ (ISRO) விண்வெளி பயன்பாட்டு மைய இயக்குனர் நிலேஷ் எம் தேசாய் பேசிய போது, நெல் மற்றும் கோதுமைக்கு அப்பால் அவற்றின் பயன்பாட்டை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி 1969 ஆம் ஆண்டு முதல் பண்ணைத் துறையில் விண்வெளி தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன எனக் குறிப்பிட்டார்.

விண்வெளித் துறையின் RISAT-1A மற்றும் VEDAS ஆகியவற்றைப் பயன்படுத்தி Krishi-DSS தளம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் ISRO அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read more 

அதிக விளைச்சல் தரும் 109 பயிர் ரகங்கள் - பிரதமர் மோடி அறிமுகம்!!

English Summary: Government Launches Satellite-Based System to Aid Agricultural Decision Making Published on: 16 August 2024, 09:17 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.