16.3 கோடிக்கும் கூடுதலான குடும்பங்களுக்கு மாதம் 1 கிலோ சர்க்கரை குறைந்த விலையில் வழங்க ஆலோசனைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது 2.5 கோடி குடும்பங்களுக்கு இதன் பயன் கிடைத்துள்ளது. செய்தி நிறுவனம் இந்த அறிக்கையை திங்களன்று வெளியிட்டிருந்தது. கடந்த வாரம் நடந்த உணவு அமைச்சகம் கூட்டத்தில் அமைச்சரவையில் இத்திட்டதை பற்றிய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அமைச்சரவை மீண்டும் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்றும், மற்றும் உணவு தானியங்கள் (கோதுமை, அரிசி) விநியோகிப்பதை பற்றிய கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.
அரசாங்கத்திற்கு அதிகரிக்கும் ரூ 4727 கோடி செலவு
அந்தியோத்திய அண்ண யோஜனா (AAY) கீழ் 2.5 கோடி குடும்பங்களுக்கு ரூ13.5 விலையில் மாதம் 1கிலோ சர்க்கரை வழங்கப்பட்டு வருகிறது. செய்தி நிறுவனத்தின் தகவல் படி அரசாங்கம் இத்திட்டத்தை 16.29 கோடிக்கும் கூடுதலான குடும்பங்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்றும், மேலும் இதனால் அரசாங்கத்திற்கு ரூ 4727 கோடி செலவு அதிகரிக்கும்.
80 கோடி குடும்பங்களுக்கு கூடுதலாக கோதுமை மற்றும் அரிசி வழங்க திட்டம்
உணவு அமைச்சகம் ரேஷன் ஒன்றில் 1 அல்லது 2 கிலோ கூடுதலாக உணவு தானியங்களை வழங்குவதை பரிசீலித்து வருகிறது. தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 80 கோடி குடும்பங்களுக்கு மாதம் தோறும் 5-5 கிலோ கோதுமை மற்றும் அரிசி மலிவான விலையில் வழங்கப்படும். கோதுமை கிலோ ரூ2, அரிசி கிலோ ரூ3 விலையில் வழங்கப்படும். இந்தியாவின் உணவுக் கழகம் (FCI) இடம் கூடுதல் உணவுப் பொருட்கள் இருப்பதன் காரணமாக உணவு தானியங்களை கூடுதலாக வழங்குவதை பற்றிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தென் மேற்கு பருவமழை ஜூன் 5 தேதிக்குள் கேரளாவை சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பருவமழை துவக்கத்திற்கு முன்பே கூடுதலாக உள்ள உணவுப் பொருட்களை காலி செய்வதற்கான அழுத்தம் எப்,சி.ஐ யின் மீது போடப்பட்டுள்ளது.
k.sakthipriya
krishi jagran
Share your comments