1. செய்திகள்

புதிய கல்வி கொள்கை 2019: கஸ்துரி ரங்கன் தலைமையிலான நிருபர் குழு பரிந்துரை: தேசிய கல்வி ஆணையம் அமைக்க திட்டம்

KJ Staff
KJ Staff

மத்தியில் ஆளும் தேசிய மக்கள் கூட்டணி பல சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போதுள்ள கல்வி முறையில் மாற்றம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் கல்வி முறையிலும், கற்பித்தல் முறையிலும், பட திட்டத்திலும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க உள்ளது.

தற்போதுள்ள கல்வி முறையானது 1986 ஆம் ஆண்டினை அடிப்படையாக கொண்டு வடிவமைக்க பட்டது.அதன் பின் 1992 ஆம் ஆண்டு இதில் சில மாற்றங்களை மட்டுமே செய்திருந்தனர். 2014 இல் மோடி தலைமையிலான அரசு புதிய கல்வி முறையினை கொண்டு வர திட்டமிட்டிருந்தது. இதற்காக கஸ்துரி ரங்கன் தலைமையில் குழு ஒன்று அமைக்க பட்டு அதற்கான ஆய்வினை செய்தது. மீண்டும் பதவி ஏற்றுள்ள அரசு இந்த ஆய்வறிக்கையினை ஆலோசித்து தேவையான மாற்றங்களை செய்து புதிய முறையினை அறிமுக படுத்த திட்டமிட்டுள்ளது.

புதிதாக பதவி ஏற்றுள்ள மனித வள மேம்பட்டு அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் நிஷாங்க் இடம் புதிய கல்வி கொள்கை வரைவு சமர்ப்பிக்க பட்டுள்ளது. 484 பக்கங்களை கொண்ட அந்த வரைவில் பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. குறிப்பாக மாணவர்களின் பாடத்திட்டம், ஆசிரியர்களின் தகுதி தேர்வு என அனைத்து கோணங்களிலும் அலச பட்டுள்ளது.

புதிய கல்வி கொள்கை வரைவின் முக்கிய அம்சங்கள்

 • 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களின் பொது தேர்வு என்ற முறையினை மாற்றி செமஸ்டர் முறையினை அறிமுக படுத்த பரிந்துரைத்துள்ளது. மேலும் தேர்வு முறையிலும் மாற்றம் கொண்டு வர ஆலோசனை கொடுக்க பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் படிப்பு சுமை  குறைவதோடு மன அழுத்தத்தினையும் குறைக்கும்.
 • 3,5,8 ஆம் வகுப்புகள் முறையே பொது திறனறி தேர்வுகள் நடத்த பரிந்துரைக்க பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் சிந்தனை திறன், பொது அறிவு மேம்படும்.
 • உயர் படிப்பிற்கு உதவும் பொருட்டு தேசிய தேர்வு ஆணையம் மாணவர்களின் விடைத்தாள் , மதிப்பெண் சான்றிதழ்களை பள்ளிகளுக்கு வழங்குதல் என ஆலோசனைகள் வழங்க பட்டுள்ளன.
 • மொழி அறிவினை மேன்மை படுத்தும் பொருட்டு மூன்று மொழி வரைவினை கொடுத்துள்ளது. பெரும்பாலான தென் மாநிலங்கள் எதிர்த்து வரும் நிலையில் இம்முடிவினை கை விட உள்ளது.
 • புதிய கல்வி அமைப்பானது தொலைநோக்கு பார்வையுடையதாகவும், மாணவர்களின் சிந்திக்கும் திறன், திட்டமிடல் இவற்றை உள்ளடக்கியதாகவும், பாடத்திட்டத்திலும், கற்பித்தல் முறையிலும் வரைவினை சமர்ப்பித்துள்ளது.
 • தனியார் பள்ளிகளின் கட்டண உயர்வினை முறை படுத்த பரிந்துரைக்க பட்டுள்ளது. பள்ளி மேம்பட்டு நிதி, உள்கட்டமைப்பு நிதி என எந்த ஒரு நிதியினையும் வசூலிக்க தடை செய்ய வலியுறுத்தி உள்ளது. மாநிலங்களில் பள்ளி ஒழுங்கு முறை ஆணையம் அமைத்து 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டண உயர்வினை அமுல் படுத்தும்.
 • புதிய கல்வி முறையில் ஆரியப்பட்டா, சாணக்கிய போன்றோரினை குறித்த தகவல்களை பாடத்திட்டத்தில் சேர்க்க திட்டமிட்டுள்ளது. நீர்மேலாண்மை மற்றும் யோகா போன்றவை பாடத்திட்டத்தில் பரிந்துரைக்க பட்டுள்ளது.
 • ஆசிரியர்களை தேர்வு செய்வது, இடமாற்றம் செய்வது என பலவற்றில் மாற்றம் கொண்டு வர தீர்மானித்துள்ளது.
 • கிராமப்புறங்களில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய முறையான தாங்கும் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பரிந்துரைக்க பட்டுள்ளது.
 • அடிக்கடி இடமாற்றுதல் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே உள்ள உறவினை பாதிப்பதோடு கல்வியையும் பாதிக்கும் என பரிந்துரைக்க பட்டுள்ளது.
 • இன்டெர்க்ராட்ட் பி.எட் எனும் நான்காண்டு அடிப்படை தகுதியாக மாற்ற திட்டமிட்டுள்ளது. கற்றல் அல்லது பிற பணிகளுக்கு குறிப்பாக தேர்தல் பணிகளுக்கு உட்படுத்த கூடாது என பரிந்துரைக்க பட்டுள்ளது.
 • தரமில்லாத தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை விரைவில் மூட திட்டமிட்டுள்ளது.        மேலும் விவரங்களுக்கு https://mhrd.gov.in/ என்ற இணையதளத்தில்  பார்க்கலாம். பொது மக்களும் புதிய கல்வி கொள்கை குறித்து ஜூன் 31 தேதி வரை கருத்துக்களை இந்த  இணையதளத்தில் தெரிவிக்கலாம்.

Anitha Jegadeesan

Krishi Jagran

English Summary: New Education Policy 2019: Dr. Kastrurirangan And 11 Member Team Submitted A Draft:

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.