தமிழகத்தில் அரசு பணியாளர்கள் அனைவரும் தமிழ் பொறுமையுடன் இருக்க வேண்டும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கூறியுள்ளார்.
தமிநாடு அரசுப்பணி நியமனத்திற்காக நடத்தப்படும் தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு குறைந்தபட்சம் 40 மதிப்பெண் பெறுவது அவசியம். தமிழ்மொழி தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களின் இதர போட்டித் தேர்வு தாள்கள் மதிப்பீடு செய்யப்படாது.
குரூப் 1, 2, 2A ஆகிய இரு நிலைகளைக் கொண்ட தேர்வுகளை தமிழ் மொழி தகுதித்தேர்வு விரித்துரைக்கும் வகையில் நடைபெறும். குரூப்-4 ஆகிய தேர்வுகளில் பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு பொது தமிழ் மொழி மட்டுமே மதிப்பீடு தேர்வாக இருக்கும்.
தமிழ்நாட்டின் அனைத்து தேர்வுகளிலும், தமிழ் மொழி கட்டாயமாக்குவதன் மூலமாக தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 100% அரசுவேலை கிடைக்கும் வகையில் தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுபோன்ற சூழ்நிலையில், குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பில் தமிழ் மொழி பாடத்தில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் தான் தமிழ்நாட்டில் அரசு வேலை பெற முடியும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், மேலும் இனி வரும் காலங்களில் எந்த அரசு தேர்வாக இருந்தாலும் அடிப்படை தமிழ் புலமை அவசியமாகும், தமிழ், தமிழ்நாடு குறித்து கேட்கப்படும் கேள்விகளில் உரிய பதில் அளித்தால் மட்டுமே அரசுப் பணி கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:
Share your comments