தருமபுரி மாவட்டத்தில் சுமார் ரூ.4.5 கோடி நிதியில் புதியதாக வேளாண் கல்லூரி தொடங்க உள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தருமபுரி மாவட்டம் கும்முனூர் கிராமத்தில் 37 ஏக்கர் பரப்பளவில் புதியதாக வேளாண் மற்றும் தோட்டக்கலை பட்டயப்படிப்புகளுக்கான புதிய வேளாண் கல்லூரி தொடங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.4.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த கல்லூரி நடப்பு கல்வியாண்டில் இருந்தே அமலுக்கு வருவதாகவும், கல்லூரி தற்காலிகமாக, மல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் சேர்க்கை, உதவி பேராசிரியர் நியமனம் உள்ளிட்ட பணிகளை வேளாண் பல்கலைக்கழகம் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க..
நவீன வேளாண் இயந்திரங்கள் வருகை! - மானிய விலையில் பெற பொறியியல் துறையை அணுக விவசாயிகளுக்கு அழைப்பு!!
ஆழ்துளை கிணறு அமைக்க விவசாயிகளுக்கு மானியம்!
PM Kisan: 70 லட்சம் விவசாயிகளுக்கு இந்த ஆண்டு ரூ.18,000 - அமித்ஷா தகவல்!
Share your comments