1. செய்திகள்

குறைந்த விலையில் வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு! அரசுக்கும் ரூ.10.20 கோடி வருவாய்! - அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம்

Daisy Rose Mary
Daisy Rose Mary
agriculture meachineries at low rent
வேளாண்மைப் பொறியியல் துறையின் திட்டங்கள் குறித்து மாவட்ட அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம்

வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர்  எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தலைமையில் வேளாண்மைப் பொறியியல் துறையின் திட்டங்கள் குறித்து வேளாண்மைப் பொறியியல் துறையின் தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில்  மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் கடந்த ஆண்டில் பெய்த பெருமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் வேளாண்மைப் பொறியியல் துறையின் இயந்திரங்களை பயன்படுத்தி 3330.40 ஏக்கர் பரப்பளவில் 2182 விவசாயிகள் பயனடையும் வகையில் மணல் திட்டுகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது, எஞ்சிய பணிகளையும் விரைவில் முடித்திட  வலியுறுத்தினார்

அரசுக்கு ரூ.10.20 கோடி வருவாய்

மேலும் கடந்த 08.01.2022-ல் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வேளாண்மைப் பொறியியல் துறைக்கு சொந்தமான வேளாண் இயந்திரங்களை விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கிட  ‘இ-வாடகை’ ஆன்லைன் செயலி துவக்கி வைக்கப்பட்டது. இதன் மூலம்  2022-23-ஆம் ஆண்டில் 21,166 விவசாயிகள் பயனடைந்தனர். இதனைத் தொடர்ந்து 2023-24-ஆம் ஆண்டில் 30 சதவீதம் அதிகரித்து 9,797 விவசாயிகள் கூடுதலாக மொத்தம் 30,963 விவசாயிகள் பயனடைந்தனர். இதனால் அரசுக்கு ரூ.10.20 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது என்றார் 

குறைந்த விலையில் இயந்திரங்கள் வாடகை

டெல்டா மாவட்டங்களில் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு வாய்க்கால்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.20 கோடி செலவில், 4961 கிலோ மீட்டர் நீளத்திற்கு தூர்வாரப்பட்டுள்ளது. வேளாண்மைப் பொறியியல் துறையின் மறுசீரமைப்பின்படி, வட்டார அளவில் உதவிப் பொறியாளர் (வேளாண்மைப் பொறியியல்) ஃ இளநிலைப் பொறியாளர் (வேளாண்மைப் பொறியியல்) பணியமர்த்தப்பட்டு, டிராக்டர்கள் வட்டார அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால், வேளாண் இயந்திரங்களை விவசாயிகளுக்கு எளிதில் கொண்டு சேர்த்து வாடகைக்கு வழங்கிட ஏதுவாக உள்ளது. இதனால் விவசாயிகள் உரிய நேரத்தில் வேளாண் பணிகளை இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ள  முடிகிறத என்றார்.

நீராதாரங்களை மேம்படுத்திடவும், கிராமங்களின் விவசாயிகள் பயன்பெறும் பொருட்டும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் இதுவரை 1924 பண்ணைக் குட்டைகள் தனிப்பட்ட விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் அமைத்துத் தரப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான வேளாண் இயந்திரங்கள், கருவிகளை இயக்குதல், பராமரித்தல் தொடர்பான பயிற்சி முகாம்கள்,  மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற முகாம்கள் மற்றும் வேளாண் இயந்திரமயமாக்குதலுக்கான திட்டத்தினை விரைந்து முடித்திட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். 

வேளாண் திட்ட விழிப்புணர்வு பிரச்சாரம்

கூட்டத்தின் முடிவில்  வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள், விவசாயிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு விவசாயத்திற்குத்  தேவையான புதிய திட்டங்களை கண்டறிந்து வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் செயல்படுத்திடவும், வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களான விவசாயிகளுக்கு சூரிய சக்தி பம்பு செட்டுகள் மானியத்தில் அமைக்கும் திட்டம்இ 100 சதவீத மானியத்தில் பண்ணைக் குட்டைகள் அமைத்தல், நீர்சேகரிப்பு கட்டமைப்புகளை புனரமைத்தல் போன்றவற்றை விவசாயிகளிடையே பிரபலப்படுத்தும் வகையில் வெற்றிக் கதைகளை துண்டு பிரசுரங்கள்,  தொலைக்காட்சி மற்றும் செய்தி குறிப்பின் வாயிலாக பிரபலப்படுத்திடவும் அறிவுரை வழங்கினார்.

இறுதியாக, வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வாங்கி அவற்றை விவசாயிகளிடையே  பிரபலப்படுத்திட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

இந்நிகழ்வில் வேளாண்மைப் பொறியியல் துறையால் வடிவமைக்கப்பட்ட நெல் தானியத்தினை மூட்டையில் பிடிக்கும் கருவியின் செயல் விளக்கத்தினை வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டு அதனை மேலும் மேம்படுத்திட அறிவுரைகள் வழங்கினார்.  இவ்வாய்வுக் கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலர், தலைமைப் பொறியாளர்கள் மற்றும் இதர துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சர்க்கரை ஆலைகளில் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் 

அதன் பின்னர், சென்னை நந்தனத்தில் உள்ள சர்க்கரைத்துறை ஆணையர் அலுவலகத்தில்  ஆய்வுக் கூட்டம்  நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நடப்பு 2023-24 அரவைப் பருவத்தின் செயல்பாடுகள் குறித்தும் எதிர்வரும் 2024-25 அரவைப் பருவத்திற்கான கரும்பு உற்பத்தி,  சுத்திகரிப்பு பணிகள் இணைமின் உற்பத்தி திட்ட செயல்பாடுகள் தேசிய வேளாண்மை வளர்ச்சி  திட்டம்,  கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.   மேலும் கரும்பு விவசாயிகளை ஊக்குவித்து கரும்பு  உற்பத்தியை பெருக்குவதற்கும்இ ஆலை செயல்பாடுகளை மேம்படுத்தவும் உரிய அறிவுரைகளை வழங்கினார்கள்.

Read more 

Krishi-DSS | எப்போ விதைக்கனும் எப்போ அறுவடை செய்யனும்? இனி செயற்கைக்கோள் சொல்லும்!

அதிக விளைச்சல் தரும் 109 பயிர் ரகங்கள் - பிரதமர் மோடி அறிமுகம்!!

English Summary: Government received 10 crore revenue by providing agriculture machineries at low price Published on: 17 August 2024, 12:11 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.