1. செய்திகள்

தடுப்பூசி போட்டுக் கொள்ளாத அரசு பணியாளர்களுக்கு சம்பளம் கிடைக்காது.

T. Vigneshwaran
T. Vigneshwaran

தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருப்பது தலைப்புச் செய்திகளில் இடம்பற்றுள்ளது. இது எந்த மாநிலத்தின் அண்மைச் செய்தி என்று பார்க்கலாம்.

இந்த அதிரடி நடவடிக்கையை மத்திய பிரதேசத்தின் மாவட்ட ஆட்சியர் ஒருவர் பிறப்பித்துள்ளார். ஜூன் மாதத்துக்கான சம்பளம் வழங்குவதற்கு முன்னதாக, அரசு ஊழியர்களிடம் தடுப்பூசி சான்றிதழ்களையும் கேட்டுப் பெறவேண்டும் என்று மாவட்டத்தின் அனைத்து கருவூல அத்திபாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். 

கொரோனா தொற்றால் உலகமே பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் முதல் அலையை விட இரண்டாவது அலை மிகவும் வீரியமாக தாக்குதலை தொடுத்தது. இரண்டாவது அலையை தீவிரமாக பரப்பிய  கொரோனா வைரஸின் டெல்டா திரிபு, டெல்ட்டா பிளஸ் என தனது உருவை மாற்றிக் கொண்டுவருகிறது. இதுவரை டெல்டா பிளஸ் தொற்றால்  40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் அச்சுறுத்தலை  ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில் தடுப்பூசி மட்டுமே உயிரை காக்கும் என்பதால், அனைவருக்கும் விரைவில் கொரோனா தடுப்பூசி போடுவதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மும்முரமாக இருக்கின்றன. இதை ஊக்குவிக்கும் வகையில், மத்தியபிரதேச மாநிலத்தின் உஜ்ஜைன் மாவட்ட ஆட்சியர் அஷீஷ் சிங், தடுப்பூசி தீவிரத்தை ஓரடி முன்னே எடுத்து சென்றுள்ளார். தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அரசு பணியாளர்களுக்கு சம்பளம் கிடையாது என்று அறிவித்துவிட்டார்.

ஜூலை 31ஆம் தேதிக்குள் அரசு ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழை சமர்பித்தால் தான், அவர்களுக்கு சம்பளம் வசங்கப்படும்.

ஜூன் மாதத்துக்கான சம்பளம் வழங்கும்போதே, தடுப்பூசி சான்றிதழ்களையும் கேட்டுப்பெறுங்கள் என்று மாவட்டத்தின் கருவூல அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். அப்போதுதான் அடுத்த மாத இறுதிக்குள் அரசு ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு முடித்துக்கொள்வார்கள்.

இந்த உத்தரவு, மாதாந்திர சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு மட்டுமல்ல! அரசின் தினக்கூலி மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் என அரசுக்காக பணியாற்றும் அனைவரும் தடுப்பூசி போட்டிருக்கிறார்களா என்ற தகவலையும் கேட்டுப் பெற்று சமர்ப்பிக்கும்படி அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்த அரசு ஊழியர்கள் தொடர்பான தரவுகளை ஆராய்ந்தபோது, இறந்தவர்கள் யாரும் தடுப்பூசி போடவில்லை என்ற தகவல் தெரியவந்தது. இதையடுத்து, அரசு ஊழியர்களை தடுப்பூசி போடச் செய்வதற்கான முயற்சியில் உஜ்ஜைன் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

மேலும் படிக்க:

7.3 கோடிக்கும் அதிகமானோருக்கு Covid தடுப்பூசி!

குறைந்து வரும் கொரோனா பாதிப்பு : தமிழகத்தில் 244 நாட்களுக்கு பின் 600க்கு கீழ் குறைந்தது!!

டெல்டா பிளஸ் வகை கொரோனாவின் அச்சுறுத்தல்.மூன்று மாநிலங்களுக்கு எச்சரிக்கை!

English Summary: government servants who are not vaccinated are not get paid. Published on: 24 June 2021, 10:58 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.