நம் அனைவரின் வீட்டிலுமே சமையல் எரிவாயு சிலிண்டர்(LPG) இருக்கும். மாதம் ஒரு முறையோ அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையோ நாம் சிலிண்டர் வாங்குவது உண்டு. சிலிண்டர் விலையும் 1000 ரூபாயை நெருங்கிவிட்டது. ஆனால் சிலிண்டருக்கு அரசு தரப்பிலிருந்து வரும் மானியம் நமது செலவை சற்று குறைக்கும். ஆனால் சிலர் சிலிண்டர் மானியம் வருவதே அறியாமல் உள்ளனர்.
அனைத்து சமையல் எரிவாயு வாடிக்கையாளர்களுமே சந்தை விலையில் சிலிண்டரை வாங்க வேண்டும். அதன் பின்னரே மானியத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் அரசு மூலம் நேரடியாக செலுத்தப்படுகிறது. ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 14.2 கிலோ எடையுள்ள 12 சிலிண்டர்களை மத்திய அரசு மானியத்தில் வழங்குகிறது.
சிலிண்டருக்கான மானியம் வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டதா இல்லையா என்பதை நீங்கள் வீட்டில இருந்தே சரிபார்க்கலாம். இதற்கு எங்கும் அலைய வேண்டியதில்லை. ஆன்லைன் மூலமாகவே மிகச் சுலபமாகப் தெரிந்துகொள்ளலாம்.
http://mylpg.in/ என்ற வலயத்தளத்துக்கு சென்று உங்களுடைய LPG ஐடியை உள்ளிட்ட வேண்டும்.
நீங்கள் சிலிண்டர் வாங்கும் கம்பெனி ஆகிய விவரங்களை வழங்க வேண்டும். சிலிண்டருக்கு பதிவு செய்யப்பட்ட மொபைல் என்னையும் வழங்க வேண்டும்.
மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி(OTP) எண்ணைப் பதிவிட்டு, கேப்ட்சா குறியீட்டையும் எழுதி 'proceed' கொடுக்க வேண்டும்.
அடுத்ததாக வரும் புதிய பக்கத்தில் உங்களது ஈமெயில் ஐடி உள்ளிட்டு பாஸ்வர்டு உருவாக்க வேண்டும்.
இது முடிந்தபின் உங்களது ஈமெயில் ஐடிக்கு ஆக்டிவேசன் லிங்க் வரும். பிறகு, அதை கிளிக் செய்தால் உங்களது கணக்கு ஆக்டிவேட் ஆகிவிடும்.
மீண்டும் http://mylpg.in/ வெப்சைட்டில் லாகின் செய்து View Cylinder Booking History/subsidy transferred’ என்ற தேர்வை கிளிக் செய்து உங்களது மானியம் தொடர்பான விவரக்குறிப்புகளை நீங்கள் பார்க்கலாம்.
மேலும் படிக்க:
Share your comments